முதலில் திஸ்கி :)
"""எனக்கு தெரிந்த ஒரு நம்பகமான அரசியல் ஆர்வலர் நண்பரின் வாய்வழி செய்தி..இதற்கு எந்த ஆதாரமோ அல்லது தகவல்களோ என்னிடம் கிடையாது.எனவே இதை ஒரு காற்றில் உலவும் செய்தியாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.""
சிறிது காலமாகவே முதல்வர் வயிறு சம்மந்தப் உடல் நலக் கோளாரால் அவதிப் பட்டு அதனால் நடக்க கஷ்டப்பட்டு வருகிறாரம்.அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரைவில் வெளிநாடு பயணம் செய்ய (அமெரிக்கா அல்லது லண்டன்)திட்டமிடப்பட்டுள்ளதாம். வயதை கருத்தில் கொண்டு சிகிச்சைக்கு செல்லும் முன் ஸ்டாலினை தனது வாரிசாக கோடி காட்டிவிட்டு சூழ்நிலை சரியாக இருப்பின் துணை முதல்வராக அறிவித்து விட்டு செல்ல திட்டமிடப் பட்டிருந்ததாம்.
இதை கலைஞர் தனது பொன்விழா மேடையில் அறிவிப்பதாக இருந்ததாம்.ஆனால் இங்குதான் இன்னொரு கணக்கு புகுந்து குழப்பி விட்டது.கட்சியில் சமீப காலமாக மற்றொரு power centre ஆக உருவெடுத்து வரும் மாறன் குடும்பத்தினர் கலைஞருக்கு பிறகு கட்சியில் தங்களது பிடிமானத்தை நிலை நிறுத்திக் கொள்ள காய் நகர்த்தியுள்ளனர் என்கிறார்கள்.
அதன் தொடக்கமே இந்த கருத்துக் கணிப்பு நிகழ்வு. ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என்பது foregone conclusion என்பதாலும் அப்படி போடுவது கருத்துக் கணிப்பின் credibility யை அதிகப்படுத்தும் என்பதாலும் அதை போட்டு அடுத்த இடத்தில் யார் யார் என்று சொல்லாமல் "மற்றவர்கள்" என்று பொத்தம் பொதுவாக போட்டு தயாநிதி மாறனை மறை முகமாக குறிப்பது போல் தோற்றம் உண்டாக்கவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவுமே அழகிரி மூன்றாவது இடத்தில் குறிப்பிடப் பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் கருத்துக் கணிப்பை கலைஞரிடம் காட்டி,அவரது வாரிசு அறிவிப்பிற்கு இது ஒரு முன்னோடியாக அமையும் என்று எடுத்தியம்பிய போதும் இதிலுள்ள முரண்கள் அதனால் கட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பின் விளைவுகளை கணக்கில் கொண்ட கலைஞர் கருத்துக் கணிப்பை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் பொன்விழாவில் கலைஞர் அடுத்தது யார் என்று கோடி காட்டுவதற்கு முன் கருத்து கணிப்பை வெளியிட்டு "நாங்கள் சொன்னது சரிதான்" என சொல்லி அதற்கு பக்கபலம் சேர்ப்பதற்காக calculated risk எடுத்து மாறன் தரப்பு இந்தக் கருத்து கணிப்பை அவசரமாக (பொன்விழாவிற்கு முன்) வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் எதிர்பார்க்கப் பட்டதற்கும் மேலாக மதுரை reaction அமைந்து அதனால் மூவரின் உயிரிழப்பு ஏற்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.இதனால் தன் பொன் விழாவில் வாரிசு பற்றி கோடி காட்டும் சந்தர்ப்பம் முற்றிலும் கை நழுவிப் போனதாலேயும், மதுரை சம்பவத்தில் அழகிரியின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் தனது வாரிசுகளின் மேல் தேவையில்லாத நேரத்தில் Wrong Focus ஏற்பட்டு விட்டதாலும்தான் எப்போதும் "மறப்போம் மன்னிப்போம்" பாலிசியை கடைப்பிடிக்கும் கலைஞர் டென்சன் எகிற மாறன் குடும்பத்தின் எந்த சமாதான முயற்சிக்கும் செவி சாய்க்காமல் /இடம் கொடுக்காமல் இருக்கிறாறாம். இது இப்போதைக்கு தொடரும் என்றும் சொல்கிறார்கள்.
அடுத்து மாறன் குடும்பத்தினர் எப்படி காய் நகர்த்தப் போகிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.எது எப்படியோ இந்த சூழலை பயன் படுத்தி , விஷயங்களை தெளிவு படுத்த , கலைஞர் கூடிய விரைவில் ஸ்டாலினை வாரிசாக கோடி காட்டி விட்டு வெளி நாடு பயணப் படுவார் என்று சொல்லப் படுகிறது ...உண்மை என்னவோ யான் அறியேன் பராபரமே
அன்புடன்...ச.சங்கர்
6 comments:
முதல் பின்னூட்டம் நமதே :)
//மாறன் குடும்பத்தினர் எப்படி காய் நகர்த்தப் போகிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.//
எனக்கும் "உண்மை" எது என்று தெரியாது.
:-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி மற்றும் குமார்
சங்கர்,
என்னங்க, உள் சமாச்சாரமெல்லாம் எடுத்து விடறீங்க ? பெரிய ஆள் தான் :)
வாங்க பாலாஜி
"பெரிய ஆள் தான் :) "
இது என்னங்க உள்குத்து !!!!??????? :)))
Post a Comment