Saturday, May 19, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-3 திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே பெரும்பாலானோருக்கு அருணாசலேச்வர்தானே ஞாபகத்திற்கு வருவார்..ஆனால் திருவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு திருவண்ணாமலை உள்ளது...இது ஒரு வைணவத்தலம்.இங்கு மஹாவிஷ்ணு வேட்டைப்பெருமாளாக கத்தி முதலிய ஆயுதங்களுடன் ஸ்ரீனிவாசர் என்ற நாமகரணத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இது மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் சிறு மலை மீதமைந்த கோவில் ..சுமார் 200 படிக்கட்டுக்கள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்

கோவிலிலிருந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அழகுறத் தெரியும்

கோவில் கோபுரம்


கோவிலுக்கு செல்லும் பாதை

நடு வழியில் கண்ணன் கோவில்
கோவிலிலிருந்து பார்த்தால்
அன்புடன்...ச.சங்கர்

9 comments:

ச.சங்கர் said...

முதல் பின்னூட்டம்

G.Ragavan said...

இந்தத் திருவண்ணாமலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். சிறுவயதில் ஒருமுறை. ஏழாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை. சிறுவயது நினைவு இல்லை. ஆனால் இரண்டாம் முறை சென்ற நினைவு இருக்கிறது. சரியாக மாலை நேரம். கோயிலில் கூட்டமே இல்லை. எங்கள் குடும்பம் மட்டுந்தான். மிகவும் பொறுமையாக வழிபட்டு வர முடிந்தது.

குமரன் (Kumaran) said...

சங்கர். நான் கலசலிங்கத்தில் படிக்கும் போது அடிக்கடி இந்தத் திருக்கோவிலுக்குச் செல்வது வழக்கம். சில நேரம் கல்லூரியிலிருந்து 15, 20 பேர் போல் சேர்ந்து சென்று வில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து கேட்டும் சென்று வந்திருக்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் நிறைய பேருந்துகள் அங்கே செல்வதில்லை என்பதால் இப்படி செய்வோம். :-)

ச.சங்கர் said...

ராகவன்

இப்பொழுதும் அப்படித்தான்..திருவிழா தவிர மற்ற நாட்களில் நிதானமாக தரிசிக்கலாம்..எனக்கு இந்தக் கோவில் மூலவரை பார்க்கும் போதெல்லாம் ஏழுமலையானை அப்படியே கிட்ட பார்ப்பது போல் தோன்றும்.

ச.சங்கர் said...

குமரன்,

வாங்க..வாங்க..வாங்க
படிச்சது நம்மூரா நீங்க..நான் இருந்தது திருவில்லிபுத்தூர்..படித்தது ராஜபாளையம்..வாழ்க்கைப்பட்டது :) வத்றாயிருப்பு..போன மூன்று பதிவுகளையும் பார்த்தீர்களா?நான் படிக்கும் காலத்தில் திருவண்ணாமலைக்கு நடந்தே போவோம்..அல்லது சைக்கிளில் :)

கீதா சாம்பசிவம் said...

ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இந்த மலையையும், அதன் மேல் குடி இருக்கும் பெருமாள் பற்றியும் அனைவரும் பாத யாத்திரை செல்லும் வழக்கம் கூட உண்டு என்றும் அறிந்தோம். நேரம் இல்லாமையால் போகவில்லை. ரொம்ப நன்றி பகிர்தலுக்கு.

ச.சங்கர் said...

வணக்கம் & வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம்.
ஸ்ரீவியில் இருந்து ஒரு மணி நேரத்தில் போய் வந்து விடலாம்..அதுத்த முறை போனால் கண்டிப்பாக சென்று வாருங்கள்..
ஆமாம் புரட்டாசி மாதத்தில் பாதயாத்திரை செல்லுவர்..ஆனாலும் ரொம்ப தூரமெல்லாம் கிடையாது

வடுவூர் குமார் said...

இன்னும் இந்த பக்கமெல்லாம் போனதில்லை.
உங்க புன்ணியத்தில் படத்தையாவது பார்க்கமுடிந்ததே!!

ச.சங்கர் said...

குமார்

போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது இருப்பது தெரியாததால் மிஸ் பண்ணாமல் இருப்பதற்கு ஒரு அறிமுகம் தான் இந்தப் படப் பதிவுகளின் நோக்கம்