மதுரை என்று வழங்கும் திருஆலவாய் அன்றும் இன்றும் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, பாரம்பரியம் மிக்க, கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவே திகழ்ந்து வந்துள்ளது.
இங்குள்ள மீனாட்சி அம்மன், சொக்கநாதர் கோவில் பாண்டியராலும் பின்னர் நாயக்கர்களாலும் உருப்பெற்று பொலிவு பெற்றும் உள்ளது...மாலிக்காபூர் போன்ற அனேக வேற்று நாட்டவர் படையெடுப்புகளையும், உள்நாட்டுப் போர் முதலியவற்றையும் தாங்கி காலத்தால் அழியாத சின்னமாக நிற்கிறது.
கோவிலும் நகரமும் எங்கு அமைய வேண்டும் என ஈசனே மலைப்பாம்பு வடிவில் வந்து எல்லைகளை காட்டியதால் "திரு ஆலவாய்" எனப் பெயர் பெற்றது என்பது தல வரலாறும் சிவ பெருமான் திருவிளையாடல்களில் ஒன்றாக சொல்லப் படுவதும் ஆகும்.
ஒவ்வொரு முறை இந்தக் கோவிலுக்குள் செல்லும் போதும் அதன் விஸ்தீரணமும்..புதிது புதிதாக நான் தெரிந்து கொள்ளும் கலை , இலக்கிய, வரலாற்று, ஆன்மீக, சிற்பங்கள் மற்றுப் பல விஷயங்கள் என்னைப் போன்ற பாமரனை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒன்றல்ல பல கதைகள் வழக்கிலுள்ளன...அது போல் நூற்றுக்கணக்கான சிற்பங்கள்..இவ்வாறு இந்தக் கோவிலின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம் :)
இத்திருத்தலத்தின் விஸ்தீரணத்தையும் சிறப்புகளையும் சில புகைப்படங்கள் சொல்லி விளக்கி விட முடியாது என்பதே உண்மை.
மேற்கு கோபுரமும் கோபுரவீதியும்
நான்கிலும் மிக உயரமான தெற்கு கோபுரம்
கோபுரப் பின்னணியில் பொற்றாமரைக் குளம்
கோவில் விதானங்களும் கிழக்கு மற்றும் வடக்கு கோபுரங்கள்
கோபுரத்திலுள்ள சிற்பங்களின் ஒரு பகுதி
அன்புடன்...ச.சங்கர்
5 comments:
மதுரைக்கு வந்த சோதனை :)
அங்கயற்கண் அம்மையே போற்றி
ஆலவாய்க்கரசியே போற்றி
போகனும் என்று பார்க்கிறேன்,இன்னும் நேரம் சரியாக அமையவில்லை.
படங்கள் அருமை.
நான் கூட ஆலவாய் என்பது வேறு இடமோ என்று நினைத்திருந்தேன்.
மதுரைக்கு ஏன் சோதனை.
படங்கள் நல்லாத்தானே வந்து இருக்கு_...கேள்விக்குறி போட்டுக்குங்க.
வாங்க குமரன், குமார் & வல்லிசிம்ஹன்
போன இரண்டு பதிவுகள் பார்க்கலியா-திருமோகூர் & திருவாதவூர்
இந்த கோடை விடுமுறையில் போய் வந்ததில் இன்னும் 16 தலங்கள் பாக்கி இருக்கின்றன :) எல்லாவற்றையும் வலையேற்றி வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணம்.அவ்வப்போது கிடைக்கும் தகவலைக் கொண்டு அப்டேட் செய்யவும் உத்தேசம்.
வல்லிசிம்ஹன் said...
'''மதுரைக்கு ஏன் சோதனை.
படங்கள் நல்லாத்தானே வந்து இருக்கு_...கேள்விக்குறி போட்டுக்குங்க.""
வாழ்த்துக்கு ரொம்ப தாங்ஸ்ங்க வல்லிசிம்ஹன்.
Post a Comment