Sunday, May 20, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-5 பழமுதிர்சோலை

மதுரை அருகில் அழகர் மலை மேல் பழமுதிர்ச்சோலை என்கின்ற முருகனின் ஆறாவது படைவீடு அமைந்துள்ளது.

ஒளவைப் பாட்டியிடம் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு பழம் உதிர்த்தளித்ததால் பழம் உதிர் சோலை என்று பெயர் வந்ததாக சொல்வோரும் உண்டு.



கோவிலின் முகப்பு


கோவில் கோபுரம்




கோவில் உட்புறத் தோற்றம்



மலை மேல் நூபுர கங்கை




முருகனை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர் ஒருவர்






அன்புடன்...ச.சங்கர்

5 comments:

ச.சங்கர் said...

டெஸ்ட் பின்னூட்டம்

G.Ragavan said...

பழமுதிர்ச்சோலை....படத்தில் நீங்கள் இட்டிருக்கும் கோபுரம் கட்டுவதில் பெரிய சண்டை நடந்தது. அழகர் கோயிலார்..அந்தக் கோபுரத்தைக் கட்டக்கூடாது என்று வழக்குத் தொடர்ந்து விட்டார்கள். பிறகு ஒருவழியாக வழக்கு பழமுதிர்ச்சோலைக்குச் சாதகமாக வந்தது.

நூபுரகங்கை என்று இன்று பெயர். ஆனால் சிலப்பதிகாரக் காலத்தில் அந்த ஆற்றிற்குப் பெயர் சிலம்பாறு. அப்படித்தான் சிலப்பதிகாரம் அழைக்கிறது.

குமரன் (Kumaran) said...

இராகவன்,

அழகர் கோவிலார் பழமுதிர்ச்சோலையில் கோபுரம் கட்டக்கூடாது என்று வழக்குத் தொடர்ந்தார்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. மேல் விவரங்களை அறிந்திருந்தால் எனக்குத் தனிமடலிலாவது அறியத் தாருங்கள்.

சிலம்பாறு என்ற பெயர் பல தமிழ் இலக்கியங்களில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் அழகர் திருக்கோவிலைப் பற்றியக் குறிப்பு வரும்போது சிலம்பாற்றைப் பற்றியும் வருகிறது என்று எண்ணுகிறேன். சரியா? நூபுரகங்கை என்று இன்று அதனை அழைத்தாலும் அது சிலம்பாறு என்பதன் வடமொழியாக்கப்பட்ட பெயரே. நூபுரம் என்றால் சிலம்பு என்று பொருள். பெருமாளின் வாமன/திரிவிக்கிரம அவதாரத்தின் போது பிரம்ம தேவர் பெருமாளின் திருவடிகளைத் தொழுத நன்னீரின் பகுதி பெருமாளின் சிலம்பில் பட்டுத் தெரித்ததே சிலம்பாறு என்பது இலக்கியங்கள், புராணங்கள் வழி அறியும் செய்தி.

ச.சங்கர் said...

ராகவன்,
வருகைக்கும் சுவாரசியமான தகவலுக்கும் நன்றி....படப் பதிவுகளில் நான் ஏதும் அதிகம் எழுதாததற்கு காரணம் நீங்கள், குமரன் போன்றோர் மேலதிகத்தகவல் தருவீர்கள் என்ற நம்பிக்கைதான் :) ( எனக்கு விஷயம் தெரியாது என்பதும் இருக்கிறது :)) தொடர்ந்து எல்லாப் பதிவுகளிலும் தங்களைப் போன்றோர் ஆதரவு தொடர வேண்டும் .

ச.சங்கர் said...

குமரன்

வருகைக்கு நன்றி
சிலம்பாறு பற்றி தகவல் அருமை