Saturday, May 19, 2007

திருத்தலப் புகைப்படங்கள்-2 திருவில்லிபுத்தூர்

பொதுவாக திருவில்லிபுத்தூர் என்றாலே வைணவ திருத்தலம் ,ஆண்டாள் கோவிலும் கோபுரமும் இதெல்லாமும் தான் பெரும்பாலானோருக்கு நினைவில் வரும். ஆனால் இதே திருவில்லிபுத்தூரில் சிவ பெருமானுக்கும் ஒரு சிறப்பான கோவில் "மடவார் விளாகம்" என்ற பெயரில் உள்ளது. அங்குள்ள சிவன் "வைத்தியநாதசுவாமி" என்ற பெயரில் காட்சி தருகிறார்

அந்தக் கோவிலின் சில புகைப்படங்கள் கீழே

கோவிலின் உயர்ந்த கோபுரம்



கோபுரம் மற்றும் குளத்தின் ஒரு பகுதி



பெருமானை வழிபட்டே தீருவது என்று கோவிலில் சன்னதிக்கு எதிரில் தலை கீழாக தொங்கும் சில பக்த கணங்கள் :)



அன்புடன்...ச.சங்கர்

13 comments:

ச.சங்கர் said...

டெஸ்ட்

G.Ragavan said...

சிவகணங்களின் தவக்கோலம் மிக அருமை. கண்டிப்பாக இவர்களுக்குத் தரிசனம் கிடைக்கும். :)

திருவில்லிபுத்தூர் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கோயிலிற்குச் சென்றதில்லை. ஆண்டாள் திருக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தத் திருவண்ணாமலை வைணவத் தலம்.

ச.சங்கர் said...

ராகவன்,
அடுத்த முறை கண்டிப்பாக செல்லுங்கள்.இதுவும் நல்ல திவ்யமான கோவில்..அழகாக இருக்கும்..இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள திருவண்ணாமலை(வைணவத்தலம்)படங்களை அடுத்த பதிவில் தந்துள்ளேன் :)

G.Ragavan said...

// ச.சங்கர் zei...
ராகவன்,
அடுத்த முறை கண்டிப்பாக செல்லுங்கள்.இதுவும் நல்ல திவ்யமான கோவில்..அழகாக இருக்கும்..இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள திருவண்ணாமலை(வைணவத்தலம்)படங்களை அடுத்த பதிவில் தந்துள்ளேன் :) //

அடுத்த பதிவில் தருகின்றீர்களா? சரி. காத்திருக்கிறேன்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி பற்றி இன்னொரு தகவல். நாயக்கரின் மகள் என்ற படத்தில் இந்தக் கோயில் நிறைய காட்டப்படும். அந்தப் படம் ஜெயச்சித்ராவின் 100வது படம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியது.

குமரன் (Kumaran) said...

சங்கர். சிவன் கோவில் இருப்பது தெரியும். நானும் இராகவன் போல் அந்தக் கோவிலுக்குச் சென்றதில்லை. கோபுரத்தை மட்டும் பார்த்திருக்கிறேன். வில்லிபுத்தூரைத் தாண்டிச் செல்லும் போது வரும் என்று நினைக்கிறேன். சரியா?

Anonymous said...

Dear Shankar

Thanks for your photos. How did you take those bats without disturbing them ? I wish to visit Thiruannaamalai and Ayyanaar Kovil falls and temple. Are they nearby? How to reach Aiiyanaar Kovil Aruvi now a days? On seeing your photos, my old memories on Rajapalayam, Sanjeevi hills, Aiiyanaar Kovil Aruvi, Chakkaram movie, Baal Gova, Maambalam, western ghats bordering Raja Palayam, those Chaarals, etc etc etc got stirred. Waiting for a revisit. Keep posting your photos and notes

Thanks
Rajan

Anonymous said...

I forgot to sign my previous feedback.

Thanks
Sa.Thirumalai

ச.சங்கர் said...

வாங்க திருமலை
நானே உங்களுக்கு மடலிட வேண்டும் என நினைத்திருந்தேன், உங்களது சென்ற வருட பயணக் கட்டுரையின் பலன்...இந்த முறை நான் மெனக்கெட்டு சித்தன்னவாசல் & குடுமியன் மலை போய் வந்து விட்டேன்( Missed Nartha malai :( )அந்தப் படங்களையும் அடுத்த சில பதிவுகளில் தர உள்ளேன் ..அதற்கு லின்க்காக உங்களது பயணக் குறிப்பைக் கொடுக்க உள்ளேன்..செய்யலாம்தானே:)

வெளவால்களை நார்மலாக ஜூம் பண்ணித்தான் படம் எடுத்தேன் பிறகு பிகாசாவில் எடிட் & என்லார்ஜ் பண்ணி போட்டுவிட்டேன்.

திருவண்ணாமலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 3 KM தான்.அய்யனார் அருவி ராஜபாளையத்திலிருந்து 5 கிமி..அதாவது இரண்டும் கிட்டத்தில்தான்..இப்பொழுதெல்லாம் அய்யனார் அருவிக்கு போக ஸ்பெஷல் பர்மிசன் வாங்கவேண்டும் என கேள்விப்பட்டேன்..ஆனாலென்ன எப்போது வருகிறீர்களென்று சொல்லுங்கள்..ஆர்கனைஸ் பண்ணிவிடலாம்..அதுவுமில்லமல் ஸ்ரீவி அருகிலேயே அழகர் ஃபால்ஸ்,மீன் கொத்திப் பாறை, வழுக்குப் பாறை என ஏகப்பட்ட இடம் இருக்கிறது..அய்யனார் மலையைவிட சுவாரசியமான இடங்கள்..கூட்டம் குறைவு...நான் நல்ல கோடையில் போனதால் தண்ணீர் இல்லாததால் அய்யனார் ஃபால்ஸ் போகவில்லை :) இது போல பல பதிவுப்படங்கள்( இது 3ஆவது) போட உள்ளேன்..அடிக்கடி வலைப் பக்கம் வாங்க :)

ச.சங்கர் said...

திருமலை,

சஞ்சீவி மலை ஏறி இருக்கிறீர்களா? ஆச்சரியம்தான்..ஏனெனில் நிறைய பேருக்கு அது பற்றி தெரிந்திருக்காது...இருட்டி விட்டதாலும் ஒரே நாளில் 2 மலப் படிகளில் ஏறும் கஷ்டத்தாலும் இந்த முறை நான் போக வில்லை.

பால்கோவா, பஞ்சவர்ணம் மாம்பழம் எல்லாம் இப்போது சென்னை ரிலையன்ஸ் ஃப்ரஷிலேயே கிடைக்கிறது..தாங்ஸ் டு உலகமயமாக்கல் :(

Anonymous said...

அன்புள்ள சங்கர்

நீங்கள் சித்தன்னவாசல் குடுமியான் சென்று வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. பரதேசியின் பயணக் கட்டுரைக்கு இப்படி ஒரு விளைவா? ஆச்சரியம்தான். தாராளமாக எனது புகைப் படங்களையும் கட்டுரைகளையும் பயன் படுத்திக் கொள்ளூங்கள். எனது புகைப் படங்கள் எல்லாம் photos/yahoo.com/strajan123 ல் கிடைக்கும். கட்டுரைகள் மரத்தைடியிலும் எனது ப்ளாகான 360.yahoo.com/strajan123 யிலும் கிடைக்கும். தாராளமாக பயன் படுத்திக் கொள்ளூங்கள்

திருப்பரங்குன்றம் போட்டோ சிலவும் என் ஆல்பங்களில் உள்ளன. அதையும் சேர்த்துக் கொள்ளூங்கள்.

ஆம் நான் சஞ்சீவி மலைக்கு ஏறியுள்ளேன். ஆகா என்ன காற்று, என்ன பேரமைதி, அடடா, அடடா? அங்கு மேலே ஏறினால் ஒரு ஆசிரமும் தேவாமிர்தமான தண்ணீரும் உண்டு. அற்புதமான குன்று.

எனக்கு ராஜபாளையம் கொஞ்சம் நெருக்கமான ஊர் சார். அங்கு நான் ஒரு அட்வெஞ்சர் செய்திருக்கிறேன் :)))

நான் சிறு வயதில் ஐயனார் கோவில் சென்றிருந்த பொழுதுதான் அந்தச் சக்கரம் படம் எடுத்தார்கள், காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா பாட்டு நினைவில் இருக்கிறதா? மீண்டும் செல்ல ஆசை, நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும் பொழுது உங்களைத் தொடர்பு கொள்கிறேன். சென்ற வருடம் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வந்து எங்கும் செல்ல முடியவில்லை. தொடர்ந்து உங்கள் புகைப் படங்களைக் காண ஆவலாய் உள்ளேன், தொடருங்கள்

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

நான் அய்யனார் அருவிக் காட்டின் மேற்புறம் உள்ள எஸ்டேட்டுக்கு அடிக்கடிச் சென்றிருக்கிறேன். அந்தப் பக்கம் ஏறி இறங்கினால் தேனி வந்து விடும். மேலே ப்ரூக் பாண்ட் டீ எஸ்டேட் ஒன்றும் இருக்கிறது, அந்த மலைப் பகுதி மேகமலை என்று அழைக்கப் படும். காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த நாடோடியாகிய எனது மனமெல்லாம் அங்குதான் உள்ளது

அன்புடன்
ச.திருமலை

ச.சங்கர் said...

"""தாராளமாக எனது புகைப் படங்களையும் கட்டுரைகளையும் பயன் படுத்திக் கொள்ளூங்கள். எனது புகைப் படங்கள் எல்லாம் photos/yahoo.com/strajan123 ல் கிடைக்கும். கட்டுரைகள் மரத்தைடியிலும் எனது ப்ளாகான 360.yahoo.com/strajan123 யிலும் கிடைக்கும். தாராளமாக பயன் படுத்திக் கொள்ளூங்கள்
"

நன்றி திருமலை.


"காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா பாட்டு நினைவில் இருக்கிறதா? "

இதற்காகவே இந்தப் படம் ராஜபாளையத்தில் ரொம்ப நாள் ஓடியதாக ஞாபகம் :)

"அங்கு நான் ஒரு அட்வெஞ்சர் செய்திருக்கிறேன் :))) "

என்ன அது :) சொல்லுங்க...சொல்லுங்க :)

Anonymous said...

Good dispatch and this enter helped me alot in my college assignement. Gratefulness you for your information.