Friday, May 18, 2007

திருத்தல புகைப்படங்கள்- 1...சங்கரன்கோவில்

கோவில் கோபுரம்

 

படத்தின் மீது க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்தால் கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகளை ரசிக்கலாம்



பிரசித்தி பெற்ற நாகப் புற்று ( சங்கரன் கோவில்)



அன்புடன்...ச.சங்கர்

15 comments:

ச.சங்கர் said...

டெஸ்ட் பின்னூட்டம்

jeevagv said...

இந்த கோவில் கோபுரத்தினை நினைவு படுத்தியதற்கு நன்றி!

வடுவூர் குமார் said...

பெரிதாக்கி பார்க்கச்சொன்னீங்க..
பார்த்தேன் "யாழி"க்கு பசி அதிகமாகி புல் சாப்பிட ஆரம்பித்துவிட்டது.
கோவில் நிர்வாகம் கவனிக்க!!

jeevagv said...

//பெரிதாக்கி பார்க்கச்சொன்னீங்க..
பார்த்தேன் "யாழி"க்கு பசி அதிகமாகி புல் சாப்பிட ஆரம்பித்துவிட்டது.
கோவில் நிர்வாகம் கவனிக்க!!//
:-)

ச.சங்கர் said...

வாங்க & வணக்கம் ஜீவா வென்கட்ராமன்..அடிக்கடி வாங்க..இன்னும் நிறையப் படம் காட்டுவேன் :)

அன்புடன்...ச.சங்கர்

ச.சங்கர் said...

வாங்க வடுவூர் குமார்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது...யாழி திங்குமோ என்னவோ..( அது யாளியா...யாழியா)அதான் போட்டு வச்சுருக்கு போல...கட்டடக்கலை வல்லுனருக்கு அதிலுள்ள குறைகள் டக்கென்று கண்ணில் மாட்டி விடுகிறது :) கோவில் நிர்வாகம் எல்லா சரித்திர சிறப்பு வாய்ந்த கோவில்களிலும் இது போன்ற குறைகளை சரி செய்து மற்றும் சுற்றுலா பயணிகளை கவர விளம்பர இன்னபிற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தில் சுற்றுலாவே மிகப் பெரிய தொழிலாகி அண்ணியச்செலாவணி குவிக்க வாய்ப்புள்ளது (சிங்கப்பூர் போல0 என்பது எனது திடமான எண்ணம்.

கதிரவன் said...

சங்கர்,நான் இந்தக்கோயிலுக்கு சுமார் 10வருஷத்துக்கு முன்னே போயிருந்தேன்.அந்த நாட்களை நினைவு படுத்தியது இந்தப் படம்.நன்றி !

//கோவில் நிர்வாகம் எல்லா சரித்திர சிறப்பு வாய்ந்த கோவில்களிலும் இது போன்ற குறைகளை சரி செய்து மற்றும் சுற்றுலா பயணிகளை கவர விளம்பர இன்னபிற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தில் சுற்றுலாவே மிகப் பெரிய தொழிலாகி அண்ணியச்செலாவணி குவிக்க வாய்ப்புள்ளது (சிங்கப்பூர் போல) என்பது எனது திடமான எண்ணம்//

எனக்கும் அதே எண்ணம் - கோயில்கள் மட்டுமல்ல,வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்ற இடங்களும் சரியான பராமரிப்பில்லாமல் இருக்கின்றன.மதுரை திருமலை நாயக்கர் மகாலிலுள்ள சுவர் ஓவியங்கள் அழிந்து வருவது ஒரு சான்று

G.Ragavan said...

அது யாழிதான். யாழி புல்லும் திங்கும்னு நெனைக்கிறேன். தெரியலை. பெரும்பாலும் அசைவ விலங்கா இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இதுதான் கோயிலுக்குள்ள நுழையிற இடம். ரெண்டு பக்கமும் கடைங்க. அப்புறம் ஒருபக்கம் பிள்ளையாரு. மறுபக்கம் முருகரு. அப்புறம் படிக கீழ எறங்கும். அப்புறமும் ரெண்டு பக்கமும் கடைக. அப்புறம் உள்ள போனா வலப்பக்கம் தெப்பக்குளம்.

இந்தச் சங்கரங்கோயில்ல கெடைக்கிற புத்துமண்ணு எங்கிட்ட இருக்கு. அதத்தான் கொழச்சு நெத்தியில தெனம் வெச்சுக்கிறது. வெரல் வெரலா விப்பாங்க. அதுல நெறைய வாங்கி வெச்சிருக்கேன்.

ச.சங்கர் said...

வணக்கம் & நல்வரவு கதிரவன்

நீங்கல் சொல்வது முற்றிலும் சரி

ச.சங்கர் said...

வாங்க ராகவன்

சங்கரன் கோவில் புற்று மண் பற்றி சொன்னீர்கள்..அந்தப் பிரசித்தி வாய்ந்த புற்றின் படத்தையும் இணைத்து விட்டேன். கோவிலினுள் வெளிச்சம் சரியாக இல்லாததால் படம் கொஞ்சம் தெளிவாக இல்லை.

அல்லது நாகப் புற்று என்பதால் "படம் எடுக்கும்" போது "ஆடி " விட்டதா தெரியவில்லை :)

வல்லிசிம்ஹன் said...

கனவில ஆடறது வந்துவிட்டா
உடனே அம்மா கோவிலுக்குப் பணம் அனுப்பிடுவாங்க.
ராகவன் சொல்றமாதிரி புத்துமண்
எப்போதும் இருக்கும்.
வீட்டில வேற பூச்சி கடிச்சாகூட
இதுதான் மருந்து.
நன்றி சன்கர்.நல்லபடம்.

ச.சங்கர் said...

வணக்கம் வல்லி சிம்ஹன்

கண்டிப்பாக நீங்களும் எங்களூராகத்தான் இருக்க வேண்டும்..ஸ்ரீவி மற்றும் சுத்துப்பட்டு அனைத்திலும் சங்கரன் கோயில் புத்து மண் இல்லாத வீடு குறைவாகத்தான் இருக்கும்.

நான் படிக்கும் காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேலமாடவீதி & வாழைக்குளத் தெருவில் இருந்தேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
நன்றி சங்கர்

pillai ula said...

திருத்தலப் புகைப்படங்கள்,அனைத்தும்,அருமை ! நண்பரே!சிற்பத்தூண்களின்,புகைப்படங்களையும்,இணைத்திருக்கலாம் ! வாழ்த்துக்கள் !
ஏ.வி.பிள்ளை.

pillai ula said...

திருத்தல புகைப்படங்கள் ,,,அருமை நண்பரே !,,திருக்கோவில்களின், சிற்பத்தூண்களின் புகைப்படங்களையும்,,இணைத்திருக்கலாம் !