Friday, July 22, 2005

இரண்டு கோப்பை தேநீர்

ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டவரா நீங்கள்?

அப்ப மேல படியுங்க.

ஒரு தத்துவ பேராசிரியரிடம் மாணவர்கள் சொன்னார்கள்"ஐயா,நேரமின்மையே மிகப் பெரிய பாரமாக எங்களை அழுத்துகிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டோம்.சொந்த வேலைகலையோ குடும்பத்தையோ கவனிக்க நேரம் கிடைப்பதே இல்லை.இதுவே பெரும்பாலானோரின் தலையாய பிரச்சினை"என்று கூறினர்.
அந்த ஆசிரியர் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை.பிறகு ஒரு பெரிய காலி ஜாடியை எடுத்து மேஜை மேல் வைத்தார்.ஒரு மாணவனை கூப்பிட்டு கால்·ப் (GOLF)பந்துகளால் அந்த ஜாடியை நிரப்பும்படி சொன்னார்,அவனும் அவ்வண்ணமே செய்தான்.
பின்னர் அவர் மாணவர்களை பார்த்து "ஜாடி நிரம்பி விட்டதா" என்று கேட்டார்.அவர்கள் "ஆம்" என்றனர்.
ஆசிரியர் ஒரு பெட்டி நிறய கோலி குண்டுகளை எடுத்து அந்த ஜாடியில் போட்டார். ஜாடியை லேசாக அசைக்க கோலிகள் கால்·ப் (GOLF)பந்துகளின் இடைவெளிகளை சென்று நிரப்பின.மாணவர்களை பார்து "இப்போது ஜாடி நிரம்பி இருக்கிறதா" என்று கேட்டார். அவர்கள் மீண்டும் "ஆம்" என்றனர்.
ஆசிரியர் புன்முறுவலுடன் ஒரு பெட்டி நிறைய குறுமணலை எடுத்து ஜாடியில் போட்டார்.ஜாடியை லேசாக அசைக்க மணல் கோலிகளின் இடைவெளிகளில் சென்று நிரம்பியது.மாணவர்களை பார்த்து ஜாடி நிறம்பி விட்டதா என்று கேட்டார்.அவர்கள் மீண்டும் ஆம் என்றனர்.
ஆசிரியர் மேஜைக்கடியில் வைத்திருந்த இரண்டு கோப்பை தேநீரை ஜாடிக்குள் ஊற்றி மணல் துகள்களுக்கிடையிலான வெற்றிதத்த நிறப்பினார்.வகுப்பில் சிரிப்பலை அடங்கிய பின் ஆசிரியர் பின் வருமாறு சொன்னார்.
"மாணவர்களே இதிலிருந்த்து நான் உங்களுக்கு உணர்த்த விரும்புவது என்னென்றால் இ¢ந்த ஜாடி உங்கள் வாழ்க்கையை குறிக்கிறது.கால்·ப் பந்துகள்தான் முக்கியமான வேலைகள்-கடவுள்,குடும்பம்,குழந்தைகள்,தேக ஆரோக்கியம்,நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு,கலை..போன்றவை.
வாழ்கையில் இவை தவிர மற்ற ஒன்றும் இல்லாமல் தொலைந்து போய் விட்டால் கூட வாழ்க்கை முழுமையானதாகவே இருக்கும்(கால்·ப் பந்து நிரம்பிய ஜாடி போல)
கோலிகுண்டுகள் உன்களுக்கு தேவையான விஷயங்களை குறிக்கும்-வேலை,வீடு,வாகனம் போலமணல் துளிகள் உஙள் வாழ்க்கையின் மற்ற எல்லா சின்ன சின்ன விஷயங்கள் போல.
"நீங்கள் ஜாடியில் முதலில் மணலைப் போட்டால், கோலிகளுக்கோ அல்லது பந்துகளுக்கோ இடமில்லாமல் போய்விடும்.நீங்கள் சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் நேரத்தைவிரயம் செய்தால் பின் அத்தியாவசியமான அதி முக்கியமான வேலைகளுக்கு நேரமில்லாமல் போய் விடும்.உங்கள் சந்தோஷத்துக்கு எது அதி முக்கியமானதோ அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள்.உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள்,மனைவி / கணவனுடன் நேரம் செலவழியுங்கள், தேக ஆரோக்யத்த்ற்கான முன்னெச்சரிக்கை மருத்துவ சோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.கால்·ப் பந்துகளில் கவனம் செலுத்துங்கள்,மணல்துகள்களில் அல்ல.அதற்க்கேற்றவாறு உங்கள் நேரத்தை முதன்மைப் படுத்திக் கொள்ளுங்கள் என் முடித்தார்.
ஒரு மாணவி எழுந்து "ஐயா...அந்த இரண்டு கோப்பை தேநீர் எதைக் குறிக்கிறது" என கேட்டார்.
பேராசிரியர் புன்முருவலுடன் "இதை நீ கேட்டது எனக்கு மிகுந்த மகிழ்சியளிக்கிரது.நமது வாழ்க்கை எவ்வளவு தான் முழுமையானதாகவும்,நேரமற்றதாகவும் தோன்றினாலும் எப்படி நிரம்பிய ஜாடியினால் இரண்ட் கோப்பை தேநீரை மேலும் உள் வாங்க முடிந்ததோ அப்படி நாமும் இனிய நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு கோப்பை தேநீர் அருந்த நேரம் ஒதுக்க முடியும்" என்றார்.
அன்புடன்...ச.சங்கர்

1 comment:

இலவசக்கொத்தனார் said...

இந்த கதையைத்தான் நானும் சொல்லி இருக்கேன். கொஞ்சம் இந்த காலத்துப் பசங்களுக்குத் தோதா!

http://elavasam.blogspot.com/2007/12/blog-post_25.html

வந்து சுட்டி தந்ததுக்கு நன்றி சங்கர்.