Thursday, July 21, 2005

பாலியல் பலாத்காரமும் பத்திரிகைகளின் பங்கும்

தலை நகர் டில்லியில் திரும்பவும் நேற்று ஒரு வன்புணர்தல் (Rape) சம்பவம் அரங்கேறி யுள்ளது.
மாயாபுரி என்ற இடத்தில் அதிகாலை நாலரை மணியளவில் ஒரு பெண்ணை பலவந்தமாக காரில் கடதிய மூன்று பேரால் இந்த சம்பவம் அரங்கேற்றப் பட்டுள்ளது. தடுக்க முயன்ற அப்பெண்ணுடன் சென்ற மற்ற இரண்டு பெண்கள் மூர்க்கமாக தாக்கப் பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் அந்தப் பெண் அந்த மூன்று படு பாதகர்களால் ஓடும் காரில் வன்புணரப்பட்டு பறகு நடுத் தெருவில் தூக்கி வீசப் பட்டிருக்கிறாள்.
உடனே அனைத்து டில்லி பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு இதப் பற்றி எழுதியிருக்கின்றன. அதில் அந்தப் பெண் எந்த வழியாக எப்படி நடந்து போனாள், எப்படி காரி வந்தவர்கள் அவளை பலவந்தப் படுத்தினர் அவளுடன் சென்று கொண்டிருந்த பெண்களை எப்படிதாக்கினர் என நேரில் பார்த்தது போல் படம் போட்டு விளக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம் மே மாதம் 9 ஆம் தேதி மாயபுரிக்கு அருகிலேயே "தௌலாகுவான்" என்ற பகுதியில் நடந்தேறியது. அதிகாலை 2.30 அளவில் கல்லூரிப் பெண் ஒருவரை காரில் பலவந்தப் படுத்தி நான்கு கயவர்கள் சுமார் 2 மணி நேரம் ஓடும் காரில் வன்புணர்ந்து பின் ரோடில் வீசி விட்டு சென்று விட்டனர்.இதைப் போல் நிறைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை சொல்லிக் கொண்டே போகலாம் .

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

இதை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் ஒரு சில நாட்களுக்கு ஆஹா ஓஹோ என கூக்குரலிடுவதும் சில நாட்களில் வேறு நிகழ்வு கிடைத்தவுடன் இந்த விஷயத்தை அம்போ என விட்டு விட்டு அடுத்ததற்கு தாவி விடுவதும் எந்த விதத்தில் இவர்களது பத்திரிக்கை தர்மத்தையும், நியாயமாக இருக்க வேண்டிய சமூக பொருப்புணர்சியையும் நியாயப் படுத்த முடியும்?
பத்திரிகை விற்பனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு "investigative journalism" "adventurejournalism " என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பெரும்பாலும் கீழ்த்தரமான ரசனைகளுக்கே தீனி போடும் இந்த பத்திரிக்கைகளும்,பிறகு சில நாட்களில் அதைப் பற்றிய மக்களின் படிப்பார்வம் குறைந்து விட்டதாக தோன்றினால் அதை அப்படியே அம்போ என விட்டு விட்டு அடுத்த காசு பண்ணக் கூடியநிகழ்விற்கு தாவி விடுகின்றன.(சிறிய,பெரிய -நாள் ,வார,மாத ஏடுகள் பெரும்பாலானவை இதில் அடங்கும்) இப்படிப்பட்ட பத்திரிகைகளின் தரம் கெட்ட போக்கும் இந்த மாதிரி சீரழிவுகளுக்கு முக்கிய காரணம் என்பது எனது கருத்து.
அன்புடன்...ச.சங்கர்

2 comments:

Alex Pandian said...

Hopefully something happens out of this http://www.rediff.com/news/2005/aug/18paper.htm

but sadly SC needs/being forced to decide on everything.

ச.சங்கர் said...

நன்றி அலெக்ஸ் பாண்டியன்

நீங்கள் குறிப்பிட்டிருந்த சுட்டியில் உள்ள தகவலை கீழே அளித்துள்ளேன் .
மற்றவர்கள் படிப்பதற்காக.

Are newspapers for adults only: SC

August 18, 2005 12:25 IST


Supreme Court on Thursday issued notices to the Centre, Press Council of India, the news agencies and major dailies on a public interest litigation seeking classification of newspapers on the basis of their content to denote whether these were fit to be read universally or by adults only.

இதிலிருந்து ஏதாவது சில நல்ல முடிவுகள் , வரைமுறைகள் உருவாகும் என்று நம்புவோம்