Saturday, July 09, 2005

அவள் கேட்ட மூன்று வரங்கள்

ஆங்கிலத்தில் படித்தது.... நன்றாக இருப்பதாக பட்டதால் தமிழ்படுத்தி இருக்கிறேன்


ஒரு ஊர்ல ஒரு மாது (அதாங்க லேடி )இருந்தாங்களாம்.ஒரு நா காட்டு வழியா போய்க்கிட்டு இருக்கும் போது (ஏம்போனாங்கன்னு கேட்காதீங்க) ஒரு தவளை கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறத பார்த்தாங்க.அந்த தவளை ஒரு மந்திரவாதி தவளையாம்.

"என்னய இந்தக் கூண்டுலேர்ந்து வெளியேத்தி காப்பாத்துனீன்னா ஒனக்கு மூணு வரம் தருவேன்" அப்படீன்னுச்சாம்.அந்த மாதுவும் சரின்னுட்டு அதை கூண்டுலேர்ந்து காப்பாத்தினாங்களாம்.

தவளையும் "ரொம்ப டாங்சு... ஆனா வரத்துல ஒரு கண்டிசன் இருக்கு,அவசரத்துல சொல்ல விட்டுட்டேன் " அப்படீன்னுச்சாம்.அந்த அம்மாவும் இது என்னடா கெரகம் புடிச்சதா இருக்குன்னு நெனச்சுக்கிடே"சரி,சொல்லித் தொலை" அப்படீன்னாங்களாம்.

"நீங்க எது கேட்டாலும் ஒங்க புருஷனுக்கு அது பத்து மடங்கா கிடைக்கும் அதான் கண்டிசன் " அப்படீன்னுச்சாம்."சீ...இவ்வளவுதானா ஜுஜூபி "அப்படீன்னுட்டு அந்த அம்மா வரம் கேட்க ஆரமிச்சாங்களாம்.

""வரம் நம்பர் ஒன்"" " நான் ஒலகத்திலேயே ரொம்ப பேரழகியா ஆயிடணும்" அப்படீன்னாங்களாம்.

தவளை "ஒம்பாட்டுக்கு கேக்குரயே...ஒம் புருசன் ஒன்னய விட பத்து மடங்கு பேரழகனா ஆயிருவான்,அப்புறம் ஒலகத்துல மத்த எல்லா பொண்ணுன்களும் அவனத்தான் சுத்துவாங்க " அப்பிடீன்னுச்சாம்.


அதுக்கு அந்த பொம்பளை"பரவால்லியே. யாரு அவரை சுத்தினாலும் ஒலகத்துலியே ரொம்ப அளகான பொண்ணா நாந்தான இருப்பேன். அதுனால அவரு என்னியதா சுத்துவாரு " அப்படீன்னாக.

"புத்திசாலி பொண்ணா இருக்கியே " அப்படீன்னுட்டு தவளையும் வரத்த தந்திருச்சு.


"" வரம் நம்பர் ரெண்டு""" நா ஒலகத்திலேயே பெரிய பணக்காரியா ஆயிடணும் " அப்படீன்னாங்களாம்.

ஒடனே தவளை ஏதோ சொல்ல ஆரம்பிக்க " தெரியும்,தெரியும், எம் புருசன் என்னய விட பத்து மடங்கு பணக்காரனாயிருவாரு.அதத்தான சொல்லப் போர ? புருசம் பொண்டாட்டிக்குள்ள யாருக்கிட்ட அதிகமா பணம் இருந்தா இன்னா?அவரு பணம் என்னுது...எம் பணம் அவருது " அப்படீன்னுச்சாம். வரம் கெடச்சது.


"" வரம் நம்பர் மூணு""" எனக்கு லேசா நெஞ்சடைப்பு (அதாங்க ஹார்ட்டு அட்டாக்கு) வரணும்" அப்படீன்னு கேட்டுட்டு சிரிச்சிச்சாம் அந்த பொம்பள.


தவளை " ஆஹா...கிளம்பிட்டாய்ங்கய்யா ...கிளம்பிட்டாய்ங்கய்யா ...பயங்கர வெவரமால்ல இருக்காங்க அப்படீன்னு வடிவேலு ஸ்டயிலில நெனச்சிச்சாம்.


இந்தக் கதையிலேருந்து இன்னா தெரியுது :"பொம்பளைங்க பயங்கர புத்திசாலிங்க...அவங்கோ கிட்ட வம்பு தும்பு வச்சுக்காதிங்கோஓஒ...


இத்தப் படிக்கும் பெண்மணிகளே...தாய்மார்களே..இந்த லட்டரை படிக்கிறதை இத்தோட நிப்பாடிட்டு சந்தோசமா போய்ட்டு வாங்க.


இத்தப் படிக்கும் ஆண்களே ...அப்பாவிகளே .... அப்டீக்கா கீழ போய் தொடர்ந்து படிங்க.
>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>
மூணாவது வரத்துனால அந்தம்மா புருசனுக்கு அந்த்ம்மாவுக்கு வந்த லேசான ஹர்ட் அட்டக்க விட பத்து மடங்கு லேச ஹார்ட் அட்டாக் வந்திச்சாம்.


இதுலேர்ந்து இன்னா தெரியுது :பொம்பளைங்க உண்மையிலேயே புத்திசாலிங்க இல்லை. ஆனா அப்படி நெனைச்சிக்கிட்டு இருக்காங்க,..... அவங்க பாட்டுக்கு அப்படியே நெனைச்சுக்கிட்டு இருக்கட்டும்.


எம்மா..இதப்படிக்கிற நீங்க ஒரு பொண்ணுன்னா .... சொல்லச் சொல்ல கேக்காம இதுவரைக்கும் படிச்சிட்டு வந்திருக்கியளே.


இதுலேந்து இன்னா தெரியுது.....பொம்பளைங்க எப்பவுமே சொன்ன பேச்ச கேக்கவே மாட்டாங்க அப்படீன்னு நிரூபணம் ஆவுதில்ல....


ஐய்யயோ...பொம்பளைங்கள்ளாம் ஒண்ணா சேர்ந்து அடிக்க வாராங்களே....விடு ஜூட்...


அன்புடன்....ச.சங்கர்


முக்கியமான பின்குறிப்பு : தாய்க்குலமே,சகோதரிகளே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.ஆணாதிக்கத்தின் வெளிப்பாடும்மில்லை.சிரிப்புக்காக மட்டுமே எழுதப் பட்டது .இருந்தும் மனம் புண்பட்டிருப்பின் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன். ( consolation : இந்தக் ஜோக்கில் பெண்ணினிடத்தில் ஆணை வைத்து எழுதினாலும் சரியாக வரும் !!!!)

1 comment: