Saturday, August 15, 2009

எனது டைரியின் இன்றைய பக்கம்

லீவு நாளானதால் மிகவும் லேட்டாக எழுந்திருந்து கையில் காப்பிக் கோப்பையுடன் பேப்பரை மேய்ந்தால் பன்றிக் காய்ச்சலையும் சுதந்திர தினத்தையும் தவிர வேறு செய்திகள் வெகுவாக இல்லை.

இந்தியாவில் பருவ மழை பொய்த்ததால் கரீஃப் என்று சொல்லக் கூடிய கோடை காலப் பயிர் விளைச்சல் பாதிக்கப் பட்டிருப்பதுடன் இந்த நிலை (மழை குறைவு) இந்த மாதமும் தொடர்ந்தால் நிலத்தின் ஈரத் தன்மை கடுமையாக பாதிக்கப் படுமாகையால் ராBபி என்று சொல்லக் கூடிய குளிர் கால பயிர் விளைச்சலும் பாதிக்கப் படும் என்ற செய்தி மிரட்டுகிறது.

ஏற்கனவே ஏகத்துக்கும் ஏறிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியிலும், வீட்டு பட்ஜெட்டிலும் இது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதென்று யோசித்தாலே திகிலூட்டுகிறது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இதெல்லாம் பற்றிக் கவலைப் படுவாரா அல்லது நின்று போன இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை திரும்ப ஆரம்பித்து எப்படி கலெக்க்ஷன் பார்ப்பது என்று கவலைப் படுவாரா தெரியவில்லை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அப்படியே நெட்டைத் திறந்து மெயில்களையும் , வலைத் தளங்களையும் மேய்ந்தால் அங்கும் ஒரே " சுதந்திர தினம்" . அது தவிர சொல்லி வைத்தது மாதிரி நிறையப் பேர் சேரனின் " பொக்கிஷம் " படத்துக்கு விமர்சனம் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

படித்தவற்றுள் பெரும்பாலானா விமர்சனங்கள் "கொலை வெறியுடன் " ஒரே மாதிரியாக இருக்க பதிவர்கள் கேபிள் சங்கர் என்பவரின் இந்த விமர்சனமும், கார்த்திகைப் பாண்டியனின் இந்த விமர்சனமும் படிப்பதற்கு கொஞ்சம் தேவலை.

என்னைப் பொருத்த அளவில் விமர்சனம் என்பது " நிறைகுறைகளை அலசுவதாக இருக்க வேண்டுமே தவிர நம் கடுப்பையும் எரிச்சலையும் தீர்த்துக் கொள்ளும் களிம்பாக இருக்கக் கூடாது ".


உண்மைத்தமிழன் விமர்சனம் எழுதுவதற்க்கு பதில் படிக்கும் அனைவருக்கும் படத்தின் சீடி அனுப்பி வைக்கலாம். அவர் எழுதின விமர்சனத்தைப் படிப்பதற்கும் படம் பார்ப்பதர்க்கும் அதே நேரம்தான் ஆகும் என்று நினைக்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மெயிலில் வந்த ஒரு செய்தி.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளும் , புரளிகளும் , ஜோசியங்களும் , செய்ய வேண்டியவைகளும் , செய்யக்கூடாதவைகள் பற்றிய அறிவுரைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன . அதையெல்லாம் கடைப் பிடிக்கிறீர்களோ இல்லையோ......


காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது உங்கள் முகம் கீழ்க்"கண்டபடி" இருந்தால் கண்டிப்பாக ஆபிஸ் போகாதீர்கள்














நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே



அன்புடன்...ச.சங்கர்
சென்னை--15/08/2009

10 comments:

manjoorraja said...

சந்தடி சாக்கில் உண்மைதமிழனையும் இழுத்துவிட்டிருப்பது எதற்கென தெரியவில்லை

Sridhar V said...

அண்ணாச்சி பின்றீங்கப் போங்க :))

சூப்பர் குறிப்புகள். உ த அண்ணாச்சி பெருசா எழுதறது மட்டுமில்லாம படத்தோட முடிவுகள் எல்லாத்தையும் போட்டு உடைச்சிருவார் வேற. தமிழ் IMDB ல எழுதலாம் அவர்.

கலக்குங்க்ணா :)

ச.சங்கர் said...

D R அஷோக்

பதிவை ரசித்தீர்கள் என்று நினைக்கிறேன் :) நன்றி

ச.சங்கர் said...

ரொம்ப நாளாச்சு மஞ்சூர்.. செளக்கியமா? சந்தடி சாக்கிலெல்லாம் இழுத்து விடவில்லை..இன்று படித்தவைகள் பற்றி மனதில் பட்டதை எழுதினேன். ஒரு திரைப்படத்துக்கு 7 பக்கம் விமர்சனம் கொஞ்சம் ஜாஸ்திதான் . நீங்க சேஃபா அந்தப் பதிவையே படிக்கலை போலத் தெரியுதே :)

ச.சங்கர் said...

ஸ்ரீதர் நாராயணன்

வாங்க..ரொம்ப நாளாச்சி பேசி:) கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீயளே..பயணமெல்லாம் சொகமா முடிஞ்சுதா?

IMBD...புதசெவி..பவபாகு

ட்யூப் லைட்டுன்றீங்களா?பரவாயில்லை சொல்லிட்டுப் போங்க :)

உண்மைத்தமிழன் said...

உங்களது வெளிப்படையான கருத்துக்கு எனது நன்றிகள் சங்கர்..!

ச.சங்கர் said...

அன்புள்ள உண்மைத்தமிழன்

என்னுடைய கருத்தை sportive ஆக எடுத்துக் கொண்டமைக்குப் பாராட்டுக்கள்.

விமர்சனங்கள் நம்மை மேலும் மேலும் மெறுகேற்றவே செய்யும் இல்லையா? :)

இலவசக்கொத்தனார் said...

:))

//கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீயளே..பயணமெல்லாம் சொகமா முடிஞ்சுதா?//

மேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப்பேத்தும் உம் நுகபிநி! ))

ச.சங்கர் said...

////மேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப்பேத்தும் உம் நுகபிநி! ))///

நாங்க உலகுத்துக்கு இந்தாண்ட பக்கம் இருந்து பாக்குறமா அதான் உங்க கிழக்கு மேற்க்கு எங்களுக்கு மாறித் தெரியுது அப்படீன்னு சொன்னா நீர் ஒத்துக்கவா போரீரு :)

Cable சங்கர் said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..