Wednesday, August 12, 2009

பகுத்தறிவு, பக்தி, பன்றிக்காய்ச்சல்

காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும் , துணை முதல்வர் ஸ்டாலினின் மகளுமான செந்தாமரை அவர் கணவருடன் திருவண்ணாமலையில் கிரி வலம் செய்து கடவுளை வழி பட்டதாக செய்தி வந்திருந்தது. இதைப் படித்த என் நண்பன் பகுத்தறிவு உபதேசமெல்லாம் ஊருக்குத்தான் போலிருக்கிறது , பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியுல் தாத்தா " நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே" என்று சித்தர் பாடலையெல்லாம் உதாரணம் காட்டி நாத்திகம் பேசியதை பேத்தி கேட்கவில்லையா" என்றான். கருணாநிதியும் ஸ்டாலினும் நாத்திகர்களாக இருந்தால் அவர்கள் குடும்பமும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே என்றேன். அதற்கு நண்பன் " வீட்டுக்குள்ளேயே தன் மகளையும் பேத்தியையும் கன்வின்ஸ் பண்ணி திருத்த முடியாத இவங்களெல்லாம் நாட்டைத் திருத்துறேன்னு புறப்பட்டதுதான் கேலிக்கூத்து " கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போய் விடுவேன்" என்று மார் தட்டின கதைதான் என்றான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி "ஆமாம்..கல்யாணம் ஆகி ரொம்ப நாளாகி விட்டது, குழந்தை இல்லையோ என்னமோ..அதான் எவனாவது ஜோசியன் கிரி வலம் சுற்றி வரச் சொல்லியிருப்பான். ஆத்திகமாவது.. நாத்திகமாவது...அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டு விட்டுப் போனாள். " Both of them got a point there ".


சென்னையில் எல்லோரும் பன்றிக் காய்ச்சல் ஹைப்பில் இருக்கிறார்கள். அதன் பாதிப்பை விட இவர்கள் வம்பிற்காக அடிக்கும் லூட்டிதான் தாங்க முடியவில்லை.என் தங்கை மெனக்கெட்டு போன் பண்ணி உன் பிள்ளைக்கு மாஸ்க் போட்டு விட்டியா எனக் கிளப்பி விட , என் மனைவி உடனே என் அப்பாவை ஊரெல்லாம் சுற்ற வைத்து 2 மாஸ்க் வாங்கி வரச் செய்து பிள்ளைக்கு மாட்டி ஸ்கூலுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், அதை ஊரெல்லாம் ஃபோன் போட்டுச் சொல்லி பீதியை தன்னால் முடிந்த அளவு மேலும் கூட்டி விட்டாள்.பாவம்..வாழ்க்கையில் இதுவரை பன்றியே பார்த்திராத என் பையன் "கினியா பன்றி"யாகி மாஸ்க் மாட்டிக் கொண்டு தேமே என ஸ்கூலுக்கு போனான். எந்த ஒரு விஷயத்தையும் பொழுது போகாமல் வம்புக்கு அலையும் சென்னை மாமிக்களும் , மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்கி விடுகின்றனர் என்றே தோன்றுகிறது. இந்த விஷயத்தில் சக பதிவர் இட்லி வடை வலைப்பக்கத்தில் வந்துள்ள இந்தப் பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு." Please spread the right message"


அன்புடன் ... ச.சங்கர்

3 comments:

ச.சங்கர் said...

பன்றிகள் "ஸ்வைன் ஃப்ளூ"வை எப்படிச் சொல்லும்?? "மனித ஃப்ளூ" என்றா ??

பழைய ஜோக்தான்..பின்னூட்ட டெஸ்ட்டுக்கு பரவாயில்லை :)

Anonymous said...

ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் தனது மனைவியை கோவிலுக்கு கூப்பிட்டு செல்வதில் தப்பே இல்லை

Anonymous said...

இவங்களுடைய வரட்டு தத்துவங்களும், போலி பகுத்தறிவு வாதமும் பிடிக்காமதான் பொண்ணு ஆச்சாரமான குடும்பத்துப் பையனோட போய் ஐக்கியமாயிருச்சுன்றாங்க.. மனைவி கோவில் கோவிலா சுத்தி "புருஷனோட " நாத்திக பாவத்தைத் துடைக்கிறாங்க. தலைவரு பதவிக்காக போலி நாத்திகவாதம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டிருக்காரு.