Saturday, August 15, 2009

எனது டைரியின் இன்றைய பக்கம் ( 16-08-09)

Be a Roman in Rome என்ற பழமொழியை தமிழில் " ஊரோடு ஒத்து வாழ் " என்று சொல்வார்கள். இந்தப் பழமொழி அனேகமாக எல்லா மொழியிலேயும் இருக்கும் என்று நினைக்கிறேன். இது சிலருக்கு குறிப்பாக ஷாருக்கான் போன்ற வேஷம் கட்டும், ஊர் சுற்றும் கூத்தாடிக்கு தெரியாமல் போனது ஏனென்று தெரியவில்லை.

அமெரிக்க நெவார்க் விமான நிலையத்தில் இமிக்ரேசன் சோதனையின் போது அவரை இரண்டாவது கட்ட விசாரணைக்கு உட்படுத்தி விட்டார்களாம். உடனே அவருக்கு அவமானம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதில் என் பெயர் கான் என்று முஸ்லிம் பெயராக இருந்ததனால் எனக்கு இந்த அவமானம் ??? என பொரிந்து தள்ளியிருக்கிறார்.

உடனே இந்தியாவில்லுள்ள ஒரு எம்பி க்கு ஃபோன் செய்ததுமில்லாமல், அந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது. மத்திய மந்திரி அம்பிகா சோனியும் தம் பங்குக்கு பொரிந்து தள்ளியிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் இன்னொரு நாட்டின் விதி முறைகளை அதுவும் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள விதி முறைகளையே கடைப் பிடிப்பதில் அப்படி என்ன கெளரவக்குறைவு ஏற்பட்டு விடுகிறதோ தெரியவில்லை.அப்பபடியே இது முஸ்லிம் இன மக்களுக்கு எதிரான அமெரிக்கர்களின் திட்டமிட்ட மானபங்கப் படுத்துதல் என்று கொண்டாலும் தினமும் ஆயிரக் கணக்கான இந்திய முஸ்லீம்கள் இந்த மாதிரியானன அவமரியாதைகளை கடந்து அமெரிக்கா போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு கொதித்தெழுந்து ஃபோன் செய்ய எந்த மந்திரியயும் தெரியாது என்பது ஒரு புறம் இருக்க இப்படிப் பட்ட நிகழ்வுகளுக்கு அம்பிகா சோனியோ அல்லது யாருமோ இதற்கு முன் ஒரு மயிரைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுடன் இப்பொது நடந்தது ஷாருக் கானுக்கு என்றவுடன் நன்றியுடன் வாலாட்டுகிறார்களே என்பதுதான் பெரிய எரிச்சல்.

நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமுக்கு இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஏற்பட்ட போது- அதுவும் ஒரு அமெரிக்க விமான கம்பெனியால்தான் ( புரோடகால் படி அது ஒரு தவறானன செயல் என்ற போதும் கூட) அவர் பெருந்தன்மையுடன் இருந்தார் என்பதும் வாய்க்கு வந்த படி ஸ்டேட்மென்ட்கள் கொடுத்துக் கொண்டு அலையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எரிச்சலுடனே கேட்கிறேன் " ஷாருக் கான் என்ன பெரிய மயிரா ? After all ஒரு கூத்தாடி" .

என்றுதான் புகழ் பெற்றவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் பணம் படைத்தவர்களும் சாதாரணர்களை விட எல்லாவிதத்திலும் உசத்தி " என்கிற மன்னர் பரம்பரை மனப்பான்மை மறைந்து " மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் " என்ற உண்மையான ஜனநாயக சுதந்திரம் வருமோ தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்றைய மெயிலில் வந்தது

ஒரு முறை தத்துவ ஞானி கன்ஃபூசியசிடம் ஒருவர் கேட்டாராம் " மனிதர்கள் உங்களை எந்த விஷயத்தில் ஆச்சரியப் படுத்துகிறார்கள்??" என்று

அதற்கு கன்ஃபூஷ்யஸ் சொன்னாராம்

மனிதர்கள் ஆரோக்கியத்தைச் செலவழித்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிரார்கள்..பின் ஆரோக்கியத்தை சம்பாதிக்க பணம் செலவழிக்கிறார்கள்

மனிதர்கள் நிகழ்காலத்தை எந்த அளவுக்கு மறந்து விடுகிறார்கள் என்றால் வருங்காலத்தைப் பற்றி கவலையுடன் சிந்திப்பதில் அவர்கள் நிகழ் காலத்திற்காகவும் வாழ்வதில்லை, வருங்காலத்திற்காகவும் வாழ்வதில்லை

மனிதர்கள் வாழும் போது , அவர்களுக்கு சாவே இல்லை என்பது போல வாழ்கிறார்கள்..சாகும் போதோ அவர்கள் வாழவே இல்லை என்பது போல சாகிறார்கள் (வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்தொழிந்து போய் விடுகிறார்கள்.)

How very true.
நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே

அன்புடன்...ச.சங்கர்
சென்னை- 16-08-09