Friday, August 21, 2009

எனது டைரியின் இன்றைய பக்கம் - 21/08/09

பப்பு பரிட்சையில் ஏன் ஃபெயிலானான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் - விடை பதிவின் கடைசியில் :)
&&&&&&&&&&&&&&&&&
இனிமேல் அமெரிக்கா போவதானால் யோசித்துத்தான் செய்வேன் என்று ஷாருக் கான் சொல்லியிருக்கிறார். அவரைக் கேள்வி கேட்டுத் துருவியதே நிழல் உலகில் அவருக்கான தொடர்பினால்தான் என்று வரும் செய்தியைப் பார்த்தால் ஷாருக்கான் அமெரிக்கா போகும் போது யோசித்துச் செய்வது நலம் என்றுதான் தோன்றுகிறது,பொதுவாக தாவுத் இப்ராஃகிம் போன்றோருடன் ஷார்ஜா கிரிக்கெட் மேச்சில் ஒன்றாக நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் கூட்டம் இந்தியாவில் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம்..அமெரிக்காவிலெல்லாம் அரசல் புரசலாக சந்தேகப்பட்டாலே ஆப்புதான்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இன்றைக்கு வலையில் கண்ணில் பட்டது புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரின் கொலை பற்றிய சந்தன முல்லையின் இந்தப் பதிவில் ( நான் பார்த்த வரையில்)நீண்ட நாட்களுக்குப் பின் முன்னாள் மூத்த பதிவர்??? :) முகமூடியின் பின்னூட்டத்தைப் பார்த்தேன். முகமூடியும் ராபினும் ஆண்வர்கத்தை ஓரளவு காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள்.:)

இந்தப் பதிவைப் பார்த்ததும் ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் என்பவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது


The little rift between the sexes is astonishingly widened by simply teaching one set of catchwords to the girls and another to the boys. ~Robert Louis Stevenson



மேலும் சிலர் சொன்ன சுவாரஸ்யமான கருத்துக்கள்



You don't have to be anti-man to be pro-woman. ~Jane Galvin Lewis



Being a woman is a terribly difficult task, since it consists principally in dealing with men. ~Joseph Conrad



Women are the only oppressed group in our society that lives in intimate association with their opressors. ~Evelyn Cunningham


I do not wish them to have power over men, but over themselves. ~Mary Wollstonecraft



Whether women are better than men I cannot say - but I can say they are certainly no worse. ~Golda Meir



&&&&&&&&&&&&&&&&&&&&&


இன்றைய மெயிலில் வந்தது..பப்பு ஏன் ஃபெயிலானான் என்ற தலைப்பில் வந்த இந்த மெயிலைத் தமிழ்ப் படுத்தினால் ரசிக்காது என்று நினைத்ததால் இதையும் அப்படியே ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன்.








நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே

அன்புடன்...ச.சங்கர்
சென்னை- 21-08-09

Saturday, August 15, 2009

எனது டைரியின் இன்றைய பக்கம் ( 16-08-09)

Be a Roman in Rome என்ற பழமொழியை தமிழில் " ஊரோடு ஒத்து வாழ் " என்று சொல்வார்கள். இந்தப் பழமொழி அனேகமாக எல்லா மொழியிலேயும் இருக்கும் என்று நினைக்கிறேன். இது சிலருக்கு குறிப்பாக ஷாருக்கான் போன்ற வேஷம் கட்டும், ஊர் சுற்றும் கூத்தாடிக்கு தெரியாமல் போனது ஏனென்று தெரியவில்லை.

அமெரிக்க நெவார்க் விமான நிலையத்தில் இமிக்ரேசன் சோதனையின் போது அவரை இரண்டாவது கட்ட விசாரணைக்கு உட்படுத்தி விட்டார்களாம். உடனே அவருக்கு அவமானம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதில் என் பெயர் கான் என்று முஸ்லிம் பெயராக இருந்ததனால் எனக்கு இந்த அவமானம் ??? என பொரிந்து தள்ளியிருக்கிறார்.

உடனே இந்தியாவில்லுள்ள ஒரு எம்பி க்கு ஃபோன் செய்ததுமில்லாமல், அந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது. மத்திய மந்திரி அம்பிகா சோனியும் தம் பங்குக்கு பொரிந்து தள்ளியிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் இன்னொரு நாட்டின் விதி முறைகளை அதுவும் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள விதி முறைகளையே கடைப் பிடிப்பதில் அப்படி என்ன கெளரவக்குறைவு ஏற்பட்டு விடுகிறதோ தெரியவில்லை.அப்பபடியே இது முஸ்லிம் இன மக்களுக்கு எதிரான அமெரிக்கர்களின் திட்டமிட்ட மானபங்கப் படுத்துதல் என்று கொண்டாலும் தினமும் ஆயிரக் கணக்கான இந்திய முஸ்லீம்கள் இந்த மாதிரியானன அவமரியாதைகளை கடந்து அமெரிக்கா போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு கொதித்தெழுந்து ஃபோன் செய்ய எந்த மந்திரியயும் தெரியாது என்பது ஒரு புறம் இருக்க இப்படிப் பட்ட நிகழ்வுகளுக்கு அம்பிகா சோனியோ அல்லது யாருமோ இதற்கு முன் ஒரு மயிரைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுடன் இப்பொது நடந்தது ஷாருக் கானுக்கு என்றவுடன் நன்றியுடன் வாலாட்டுகிறார்களே என்பதுதான் பெரிய எரிச்சல்.

நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாமுக்கு இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஏற்பட்ட போது- அதுவும் ஒரு அமெரிக்க விமான கம்பெனியால்தான் ( புரோடகால் படி அது ஒரு தவறானன செயல் என்ற போதும் கூட) அவர் பெருந்தன்மையுடன் இருந்தார் என்பதும் வாய்க்கு வந்த படி ஸ்டேட்மென்ட்கள் கொடுத்துக் கொண்டு அலையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எரிச்சலுடனே கேட்கிறேன் " ஷாருக் கான் என்ன பெரிய மயிரா ? After all ஒரு கூத்தாடி" .

என்றுதான் புகழ் பெற்றவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் பணம் படைத்தவர்களும் சாதாரணர்களை விட எல்லாவிதத்திலும் உசத்தி " என்கிற மன்னர் பரம்பரை மனப்பான்மை மறைந்து " மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் " என்ற உண்மையான ஜனநாயக சுதந்திரம் வருமோ தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்றைய மெயிலில் வந்தது

ஒரு முறை தத்துவ ஞானி கன்ஃபூசியசிடம் ஒருவர் கேட்டாராம் " மனிதர்கள் உங்களை எந்த விஷயத்தில் ஆச்சரியப் படுத்துகிறார்கள்??" என்று

அதற்கு கன்ஃபூஷ்யஸ் சொன்னாராம்

மனிதர்கள் ஆரோக்கியத்தைச் செலவழித்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிரார்கள்..பின் ஆரோக்கியத்தை சம்பாதிக்க பணம் செலவழிக்கிறார்கள்

மனிதர்கள் நிகழ்காலத்தை எந்த அளவுக்கு மறந்து விடுகிறார்கள் என்றால் வருங்காலத்தைப் பற்றி கவலையுடன் சிந்திப்பதில் அவர்கள் நிகழ் காலத்திற்காகவும் வாழ்வதில்லை, வருங்காலத்திற்காகவும் வாழ்வதில்லை

மனிதர்கள் வாழும் போது , அவர்களுக்கு சாவே இல்லை என்பது போல வாழ்கிறார்கள்..சாகும் போதோ அவர்கள் வாழவே இல்லை என்பது போல சாகிறார்கள் (வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்தொழிந்து போய் விடுகிறார்கள்.)

How very true.
நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே

அன்புடன்...ச.சங்கர்
சென்னை- 16-08-09

எனது டைரியின் இன்றைய பக்கம்

லீவு நாளானதால் மிகவும் லேட்டாக எழுந்திருந்து கையில் காப்பிக் கோப்பையுடன் பேப்பரை மேய்ந்தால் பன்றிக் காய்ச்சலையும் சுதந்திர தினத்தையும் தவிர வேறு செய்திகள் வெகுவாக இல்லை.

இந்தியாவில் பருவ மழை பொய்த்ததால் கரீஃப் என்று சொல்லக் கூடிய கோடை காலப் பயிர் விளைச்சல் பாதிக்கப் பட்டிருப்பதுடன் இந்த நிலை (மழை குறைவு) இந்த மாதமும் தொடர்ந்தால் நிலத்தின் ஈரத் தன்மை கடுமையாக பாதிக்கப் படுமாகையால் ராBபி என்று சொல்லக் கூடிய குளிர் கால பயிர் விளைச்சலும் பாதிக்கப் படும் என்ற செய்தி மிரட்டுகிறது.

ஏற்கனவே ஏகத்துக்கும் ஏறிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியிலும், வீட்டு பட்ஜெட்டிலும் இது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதென்று யோசித்தாலே திகிலூட்டுகிறது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இதெல்லாம் பற்றிக் கவலைப் படுவாரா அல்லது நின்று போன இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை திரும்ப ஆரம்பித்து எப்படி கலெக்க்ஷன் பார்ப்பது என்று கவலைப் படுவாரா தெரியவில்லை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அப்படியே நெட்டைத் திறந்து மெயில்களையும் , வலைத் தளங்களையும் மேய்ந்தால் அங்கும் ஒரே " சுதந்திர தினம்" . அது தவிர சொல்லி வைத்தது மாதிரி நிறையப் பேர் சேரனின் " பொக்கிஷம் " படத்துக்கு விமர்சனம் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

படித்தவற்றுள் பெரும்பாலானா விமர்சனங்கள் "கொலை வெறியுடன் " ஒரே மாதிரியாக இருக்க பதிவர்கள் கேபிள் சங்கர் என்பவரின் இந்த விமர்சனமும், கார்த்திகைப் பாண்டியனின் இந்த விமர்சனமும் படிப்பதற்கு கொஞ்சம் தேவலை.

என்னைப் பொருத்த அளவில் விமர்சனம் என்பது " நிறைகுறைகளை அலசுவதாக இருக்க வேண்டுமே தவிர நம் கடுப்பையும் எரிச்சலையும் தீர்த்துக் கொள்ளும் களிம்பாக இருக்கக் கூடாது ".


உண்மைத்தமிழன் விமர்சனம் எழுதுவதற்க்கு பதில் படிக்கும் அனைவருக்கும் படத்தின் சீடி அனுப்பி வைக்கலாம். அவர் எழுதின விமர்சனத்தைப் படிப்பதற்கும் படம் பார்ப்பதர்க்கும் அதே நேரம்தான் ஆகும் என்று நினைக்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மெயிலில் வந்த ஒரு செய்தி.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளும் , புரளிகளும் , ஜோசியங்களும் , செய்ய வேண்டியவைகளும் , செய்யக்கூடாதவைகள் பற்றிய அறிவுரைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன . அதையெல்லாம் கடைப் பிடிக்கிறீர்களோ இல்லையோ......


காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது உங்கள் முகம் கீழ்க்"கண்டபடி" இருந்தால் கண்டிப்பாக ஆபிஸ் போகாதீர்கள்














நாளைய டைரி எழுத முடிந்தால் மட்டுமே



அன்புடன்...ச.சங்கர்
சென்னை--15/08/2009

Friday, August 14, 2009

பன்றிக்காய்ச்சல் --அமெரிக்கர்களின் சதி அம்பலம்

இந்த வார குமுதத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அமெரிக்காவால் திட்டமிட்டு நடத்தப் படும் சதியா என்று சந்தேகம் எழுப்பிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள் .

கீழ்க்கண்ட போட்டோக்களைப் பார்த்தால் அது உண்மைதான் என்பது போல் தெரிகிறது


















அதுனால அமெரிக்கர்களை முத்தமிடுரதா இருந்தா யோசிச்சு செய்யுங்க :)




இவங்க அடிக்கிற இந்தக் கூத்துல பன்னிக்கு காய்ச்சல் வராம இருந்தா சரி...

அன்புடன்...ச.சங்கர்

Wednesday, August 12, 2009

பகுத்தறிவு, பக்தி, பன்றிக்காய்ச்சல்

காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும் , துணை முதல்வர் ஸ்டாலினின் மகளுமான செந்தாமரை அவர் கணவருடன் திருவண்ணாமலையில் கிரி வலம் செய்து கடவுளை வழி பட்டதாக செய்தி வந்திருந்தது. இதைப் படித்த என் நண்பன் பகுத்தறிவு உபதேசமெல்லாம் ஊருக்குத்தான் போலிருக்கிறது , பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியுல் தாத்தா " நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே" என்று சித்தர் பாடலையெல்லாம் உதாரணம் காட்டி நாத்திகம் பேசியதை பேத்தி கேட்கவில்லையா" என்றான். கருணாநிதியும் ஸ்டாலினும் நாத்திகர்களாக இருந்தால் அவர்கள் குடும்பமும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே என்றேன். அதற்கு நண்பன் " வீட்டுக்குள்ளேயே தன் மகளையும் பேத்தியையும் கன்வின்ஸ் பண்ணி திருத்த முடியாத இவங்களெல்லாம் நாட்டைத் திருத்துறேன்னு புறப்பட்டதுதான் கேலிக்கூத்து " கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போய் விடுவேன்" என்று மார் தட்டின கதைதான் என்றான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி "ஆமாம்..கல்யாணம் ஆகி ரொம்ப நாளாகி விட்டது, குழந்தை இல்லையோ என்னமோ..அதான் எவனாவது ஜோசியன் கிரி வலம் சுற்றி வரச் சொல்லியிருப்பான். ஆத்திகமாவது.. நாத்திகமாவது...அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டு விட்டுப் போனாள். " Both of them got a point there ".


சென்னையில் எல்லோரும் பன்றிக் காய்ச்சல் ஹைப்பில் இருக்கிறார்கள். அதன் பாதிப்பை விட இவர்கள் வம்பிற்காக அடிக்கும் லூட்டிதான் தாங்க முடியவில்லை.என் தங்கை மெனக்கெட்டு போன் பண்ணி உன் பிள்ளைக்கு மாஸ்க் போட்டு விட்டியா எனக் கிளப்பி விட , என் மனைவி உடனே என் அப்பாவை ஊரெல்லாம் சுற்ற வைத்து 2 மாஸ்க் வாங்கி வரச் செய்து பிள்ளைக்கு மாட்டி ஸ்கூலுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், அதை ஊரெல்லாம் ஃபோன் போட்டுச் சொல்லி பீதியை தன்னால் முடிந்த அளவு மேலும் கூட்டி விட்டாள்.பாவம்..வாழ்க்கையில் இதுவரை பன்றியே பார்த்திராத என் பையன் "கினியா பன்றி"யாகி மாஸ்க் மாட்டிக் கொண்டு தேமே என ஸ்கூலுக்கு போனான். எந்த ஒரு விஷயத்தையும் பொழுது போகாமல் வம்புக்கு அலையும் சென்னை மாமிக்களும் , மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்கி விடுகின்றனர் என்றே தோன்றுகிறது. இந்த விஷயத்தில் சக பதிவர் இட்லி வடை வலைப்பக்கத்தில் வந்துள்ள இந்தப் பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு." Please spread the right message"


அன்புடன் ... ச.சங்கர்