Monday, June 23, 2008

பாங்காங் - சில புத்தர் கோவில் படங்கள்

சமீபத்தில் தாய்லாந்து சென்று வந்த போது எடுத்த சில புத்தர் கோவில் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


தாய்லாந்து மொழியில் "வாட் போ" அல்லது ஆங்கிலத்தில் "ரிக்ளைனிங் புத்தா" என்று அழைக்கப்படும் கோவிலில் புத்தர் நம்ம ஊர் அனந்த சயனப் பெருமாள் மாதிரி படுத்துக் கொண்டிருக்கிறார்( தாய்லாந்தில் நிறைய இடத்தில் "சயன கோலத்தில் புத்தர்" இருக்கிறார்). இந்த சிலையின் நீளம் 165 அடி மற்றும் உயரம் 45 அடியாம். 1788 ல் கட்டப்பட்டு அப்புறம் 1982-ல் புதுப்பிக்கப் பட்டதாம்.















"வாட் போ " கோவிலின் வெளிப்புறத் தோற்றம் கீழே














"வாட் ட்ரைமித்" அல்லது "டெம்பிள் ஆஃப் கோல்டன் புத்தா" வில் புத்தர் சிலை 5.5 டன் எடையுடன் முழுவதும் தங்கத்தால் ஆனதாம்.இந்த கோவிலை விட இந்த புத்தர் சிலை பற்றிய கதை சுவாரஸ்யமானது. 900 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட இந்த சிலை பர்மீஸ் படையெடுப்பின் போது கொள்ளையடிக்கப் படாமல் தடுக்க மேலே சாந்துக் கலவையினால் பூசப்பட்டு மறைக்கப் பட்டதாம். பின் இது உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்திருக்கிறது.1957 ஆம் வருடம் ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்கு சிலையை மாற்றும் போது க்ரேனிலிருந்து தவறி விழுந்ததில் மேல் பூச்சு சிதற உள்ளிருந்த தங்க விக்கிரகம் வெளித் தெரிந்ததாம் :)

















கோவிலின் வெளிப்புறத் தோற்றம்












தாய்லாந்து (பாங்காங்) போனா கண்டிப்பா இந்த ரெண்டு கோவிலுக்கும் போயிட்டு வாங்க.

ஆனா இந்த ரெண்டு கோவிலுக்கும் வர்ரவங்க ஏதோ வேண்டுதல் மாதிரி " வர்ராங்க புத்தர் சிலைக்கு முன்னாடி நின்னு போட்டோ புடிக்கிறாங்க..அப்புறம் நடையைக் கட்டுறாங்க" (என்னையும் சேத்துதான் :(( )இதுல காமெடி என்னன்னா போட்டோ எடுக்குறவங்க கும்புட வந்தவங்களைப் பார்த்து " கொஞ்சம் தள்ளிக்குங்க..மறைக்குது " அப்படீன்னு சொல்லுறதுதான். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் ...இல்லியா :)

அடுத்த பதிவுல வேறு சில புகைப்படங்கள் தருகிறேன்.

திஸ்கி : பதிய மேட்டர் இல்லாம இந்த மாதிரி படம் காட்டுறேன் அப்படீன்னு நெனைச்சீங்கன்னா உண்மை அதுதான் .

அன்புடன்...ச.சங்கர்

3 comments:

ச.சங்கர் said...

பினாத்தல் "கவுஜை" பதியப் போறேன் அப்படீன்னு பயமுறுத்தும் போது நான் படம் காட்டக் கூடாதா என்ன ?

ers said...

படங்கள் டாப்

ச.சங்கர் said...

நன்றி பதிவர் தமிழ் சினிமா