Monday, June 25, 2012

படித்ததில் ரசித்தது

பூவையின் முகம் தாமரை ,கைகளோ காந்தள் மலர்

நள மகாராஜன் தமயந்தியுடன் திருமணம் முடிந்ததும் தேரில் தன்னாட்டுக்கு கூட்டிச் செல்கிறான்.வழியில் சோலையில் சில இயற்கைக் காட்சிகளை தமயந்திக்குக் காட்டுகிறான்.அதிலொன்று

“ ஒரு பெண் பூப்பறிக்கிறாள்.அவளது முகத்தையே தாமரை என்று எண்ணிக்கொண்டு  வண்டுகள் மொய்க்க வருகிறதாம்.அப்படி மொய்க்க வரும் வண்டுகளை அவள் கைகள் கொண்டு தடுக்கிறாள்.அப்படியும் அந்த வண்டுகள் போகாமல் அவள் கைகளைக் காந்தள் மலர் என்றெண்ணி மொய்க்கப் பாய அதனால் பயத்தால் நடுங்கும் அந்தப் பெண்ணைப் பார்.” என்று காட்டுக்றான்

மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.


நள வெண்பா -புகழேந்திப் புலவர்

இதே காட்சியின் ஒரு பகுதியைக் கண்ணதாசன் இப்படி ஒரு படத்தில் பாடலாக எழுதியிருக்கிறார்.

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன் னிடம் உண்மை கூற...
                                                   (நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்)

இரு வல்லவர்கள் படத்தில் பி.சுசிலா,டி எம் எஸ் குரலில் பாடலும் சூப்பர் ஹிட்

பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயமாக.

http://youtu.be/gN1ERkg_dXQ

அன்புடன்...ச.சங்கர்