Saturday, October 04, 2008

நவராத்திரி, கொலு மற்றும் சில பதிவுகள்

நவராத்திரி என்றாலே வலையுலகில் சில ரெகுலர் பதிவர்கள் எழுதும் பதிவுகள் எனக்கு ஞாபகம் வரும்.குறிப்பாக துளசி டீச்சரின் நியூசிலாந்து கொலு படங்களுடன் கண்டிப்பாக இருக்கும் .:)


நான் படித்ததில் ஞாபகம் இருப்பது டீச்சரின் 2005 கொலுப்பதிவும் இந்த 2005 கொலுப்பதிவும் ,சமீபத்திய 2008 கொலுவின் இந்தப்பதிவும் .

பினாத்தல் (அவர்கள் வீட்டு) துபாய் கொலு பற்றி வெள்ளாந்தியாய் இந்தப் பதிவு போட்டிருந்தார்.அப்புறம் அவர் கொலு பற்றி ஏதும் பதிவு போட்டாரா தெரியாது.

அப்புறம் 2007 கொலு சமயத்தில் இட்லி வடையாரின் இந்த அரசியல் கொலு பதிவும் வந்தது ஞாபகத்தில் இருக்கிறது.

நவராத்திரி சீசனில் கொலு மலரும் நினைவுகள் பதிவுகளும் வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக நினைவில் இருப்பவை முன்பே படித்த ஜெயஸ்ரீ அவர்களது சிறு வயது கொலு நினைவுகளாக இந்தக் கட்டுரையும் , சமீபத்தில் படித்த டுபுக்குவின் இந்த இளமைக்கால ஜொள்ளித்திரிந்த கொலுப்பதிவும் . இந்த இரண்டுமே நான் ரசித்துப் படித்த கொலு பற்றிய பதிவுகள்.

இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவையும் வலை பதிந்து விடலாம் என்று சில படங்களை கீழே கொடுத்துள்ளேன்.வேலை மற்றும் ஊர் ஊராக சுற்றித் திரிவதால் எனது சிறு வயது மாதிரி பெரிய கொலுவெல்லாம் கிடையாது.ஜஸ்ட் மூன்று படிகள்.அதுவும் பையனுக்கு லீவு ஆகையால் அவனது ஆர்வத்தை தடை போடாமல் இருக்க.
























அப்புறம் கிரிக்கெட் செட்டையும் ,கிராமத்து விவசாய செட்டையும் தரையில் வைத்து விடுவோம். பையன் அதில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக (தத்தாவுடன் சேர்ந்து) ரோடு போட்டு,பார்க் வைத்து, ஒட்டி வெட்டி ஏதாவது க்ரியேட்டிவிடி காட்டிக்கொண்டிருப்பான்.இந்த வகையில் அவனை 9 நாள் லீவில் சமாளித்து விடலாம் என்பதாலேயே கொலு கண்டிப்பாக வைத்து விடுவோம்.:)
















3 படியோ 9 படியோ தினமும் வித விதமாய் சுண்டல் கண்டிப்பாய் உண்டு.:)

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.


அன்புடன்...ச.சங்கர்

5 comments:

ச.சங்கர் said...

டெஸ்ட் :)

பினாத்தல் சுரேஷ் said...

கொலு வாழ்த்துக்கள்!

ஜொள்ளித் திரிந்த காலம் பிடிச்ச மேட்டரா.. நோட் பண்ணுங்கப்பா! நோட் பண்ணுங்க!

அதென்ன வெள்ளந்தியா போட்டிருக்கேன்?

ச.சங்கர் said...

வாங்க பினாத்தல்.

நன்றி.

அப்பாவியா அப்புடீங்குறதை " வெள்ளாந்தியா " அப்படீன்னு சொல்றது :)))

யோசிச்சுப் பாருங்க 2008 ல பினாத்தல் அந்தப் பதிவை அப்படியா போட்டிருப்பார் ? :))

துளசி கோபால் said...

கரெக்ட்டாத் துர்காஷ்டமிக்கு வந்துட்டேன்:-)


நவராத்ரி இன்னும் முடியலை!

இனிய வாழ்த்து(க்)கள்.

ச.சங்கர் said...

வாங்க டீச்சர்

//கரெக்ட்டாத் துர்காஷ்டமிக்கு வந்துட்டேன்:-)//

"சந்திரமுகி" மாதிரி சொல்றீங்களே :)
வாழ்து(க்)களுக்கு நன்றி.

அன்புடன்...ச.சங்கர்