Saturday, April 07, 2007

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் --All the Best

அரவாணிகளின் வாழ்க்கை குறித்து "கருவறைப் பூக்கள்' படம் தயாரிப்பு

சென்னை: அரவாணிகளின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் வகையில் "கருவறைப் பூக்கள்' என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற நிஜமான அரவாணி நடிக்கிறார். திரைப்படங்களில் அரவாணிகளை கேலி செய்யும் காட்சிகளும், அரவாணிகளை வில்லன், வில்லி வேடங்களில் சித்தரிக்கப்படும் காட்சிகளும் தான் இடம் பெற்றுள்ளது. தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக அரவாணிகளின் வாழ்க்கை முறை, உளவியல் , உடல்ரீதியான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் "கருவறைப் பூக்கள்' என்ற திரைப்படம் விரைவில் தயாராகவுள்ளது. இப்படத்திற்கு லுõர்து சேவியர் என்பவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தின் கதாநாயகிக்கு அரவாணி வேடம் என்பதால் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற நிஜமான அரவாணியான லிவிங் ஸ்மைல் என்பவர் நடிக்கிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லிவிங் ஸ்மைல் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அரவாணிகளை ஆண், பெண் என்று தான் தமிழக அரசு பிரித்து பார்க்கிறது. எங்களை, "மாறிய பாலினம்' என்று அழைப்பதற்கு அரசு உத்தரவு வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். பணிகள் இல்லாத காரணத்தினால் பிச்சை எடுக்கவும், விபசாரத்தில் ஈடுபடவும் அரவாணிகள் தள்ளப்படுகின்றனர். அரசுக்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும், அரவாணிகளும் மனிதர்கள் தான், அவர்களாலும் சமுதாயத்தில் சாதனைகளை படைக்க முடியும் என்ற கருவை மையமாக வைத்தும் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு லிவிங் ஸ்மைல் கூறினார்

நன்றி : தின மலர் 08-04-07(ஞாயிறு)

அன்புடன்...ச.சங்கர்

4 comments:

ச.சங்கர் said...

டெஸ்ட் :)

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் லிவிங்க் ஸ்மைல் வித்யா!

ச.சங்கர் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நாமக்கல் சிபி அவர்களே

சாலிசம்பர் said...

வாழும் புன்னகைக்கு வாழ்த்துக்கள்.