Friday, February 09, 2007

தமிழ் பூமிக்கு நீர் கொண்டு வா

கடந்த சில மாதங்களாகவே வரிசையாக முல்லை பெரியார், காவிரி, பாலாறு என நதி நீர் பிரச்சினைகள் தலைப்புச் செய்திகளை விடாமல் பிடுத்துக் கொண்டிருக்கின்றன.

அண்டை மாநிலம் (ஞாயமாகவோ அநியாயமாகவோ) நீர் தராததற்காக குறை பட்டுக்கொண்டு நாம் இந்திய இறையாண்மை, தேச ஒருமைப்பாடு பற்றியெல்லாம் தேவையா என வினா எழுப்புகிறோம் (என்னையும் சேர்த்துத்தான்)

ஆனால் இதிலெல்லாம் இந்திய ஒருமைப் பாட்டை ஒரு தமிழர் நிலையிலிருந்து சிந்திக்கின்றோம். ஒருகேரளர்,ஆந்திரர் அல்லது கன்னடர் நிலையிருந்தால் நமது பார்வை இவ்வாறாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

இங்கு நான் சரி தவறு என்பது பற்றி பேசவில்லை .நிலைபாட்டைப் பற்றி பேசுகிறேன்.

இது பற்றி எனக்கு மேலும் தோன்றும் சில சிந்தனைகள்.

இதற்கு நிரந்தரத் தீர்வு சண்டையில் இல்லை.I'll make an offer which even your mother cannot resist என்று ஆங்கிலப் படத்தில் ஒரு வசனம் வரும்.அதுபோல உரிமை,நிலவரம்,தேச ஒருமைப்பாடு,இறையாண்மை என்பதெல்லாம் விட்டு நல்ல ஒரு ஒப்பந்தத்தின் மூலமே...அந்த ஒப்பந்தத்தை (கடை பிடித்தால் நீர் கொடுக்கும் மாநிலத்துக்கு நல்ல லாபம் இல்லையேல் பெருத்த நஷ்டம் என்பது போல்) செய்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வு பிறக்கும்.

இப்படி சிந்திப்போமே..ஆண்டாண்டு காலமாய் சண்டையிடுவதை விட்டு..காவிரி தமிழகத்தில் ஓடவில்லையெனில் விவசாயத்திற்கும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் என்ன செய்வோம் என்று யோசித்து அதனடிப்படையில் என்ன திட்டங்கள் தேவையோ அதை செயல் படுத்துவதே இன்றைய தமிழகத்தின் தலையாய கடமை.அதை விடுத்து கோர்ட் கேஸ் என அலைவதெல்லாம் கண்துடைப்பாக இருக்குமே அன்றி மக்களுக்கு நல்ல விடிவை/நிரந்தர தீர்வை அளிக்காது.இது பாலாறு, முல்லை பெரியார் அனைத்திற்கும் பொருந்தும். தண்ணிரே இல்லாத அரபு தேசங்களும் பாலை வனங்களும் முன்னேறவில்லையா? அங்கு பெட்ரோல் வளம் என்று சொல்லாதீர்கள்..தமிழகத்திலும் தொழில் வளர்ச்சி, கட்டுமானம், கல்வி போற முன்னேற்றங்கள் நிறைய இருக்கிறது...முதலில் நம்மிடம் உள்ளவற்றை நாம் சரியாக பயன்படுத்துவோம்.

காவிரி.பாலாறு,முல்லை பெரியார் என நதி பங்கீட்டில் நம் உரிமைக்காக போராடும் அதே நேரத்தில் மழை நீரை சேகரிப்பது, நிலத்தடி நீரை அதிகரிக்கத் திட்டங்கள்,கடல் நீரை மாற்றும் திட்டம், நீரை வீணடிக்காத வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ,நீர் ஆதாரங்கள் , ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை, ஆறுகளில் கழிவு நீரை கலந்து கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளுக்கு கடும் நடவடிக்கை போன்றவற்றில் கவனம் செலுத்தி நேர்மை தவறாமல் பாரபட்சமின்றி ஆட்சியாளர்கள் நடந்து கொண்டாலே நாம் தண்ணீருக்காக அடுத்த மாநிலத்திடம் கையேந்தும் அவசியமே வராது.அவர்களே உங்களுக்கு நாங்கள் தண்ணீர் தருகிறோம் எங்களுக்கு இது தாருங்கள் அது தாருங்கள் என நம்மிடம் நிறைந்துள்Lள்aஅ செல்வங்களுக்காக யாசிக்கும் நிலை வரும்.


அடுத்தவரிடம் நாம் கையேந்துவதை கடமையாகவும் உரிமையாகவும் நினைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது...அது அழிவின் ஆரம்பம்..ஆனால் தமிழகத்தில் தண்ணீரைப் பொருத்தவரை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது...சீக்கிரம் விழித்துக் கொண்டால் நமக்கு நல்லது .

அன்புடன்...ச.சங்கர்

3 comments:

ச.சங்கர் said...

பதிவும் நானே பின்னூட்டமும் நானே :)

வடுவூர் குமார் said...

50% ஒத்துக்கொள்கிறேன்.
வெடிவேலு நகைச்சுவைக்கு மீதி 50%
"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிரான்யா!!"
இப்படி ஆகிவிடக்கூடாது.

ச.சங்கர் said...

"""வடுவூர் குமார் said...
"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிரான்யா!!"
இப்படி ஆகிவிடக்கூடாது."""""

குமார்,

"""காவிரி.பாலாறு,முல்லை பெரியார் என நதி பங்கீட்டில் நம் உரிமைக்காக போராடும் அதே நேரத்தில் "" என்று குறிப்பிட்டேன்.

சும்மா இருந்தால் கண்டிப்பாக வெடிவேலு கதையாகி விடும் :))