Tuesday, December 19, 2006

அம்மா என்றால் அன்பா ?

இந்தப் பதிவு ஜெ பற்றி என்று நினைத்து வந்திருந்தால் ...sorry you have come to a wrong place :)))


பணமா .... பாசமா
....



இன்று காலையில் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும் போது தொலைக்காட்சியில் தென்கச்சி சுவாமிநாதன் தாயன்பு பற்றி விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.அதில் அவர் உண்மை சம்பவம் என்று சொன்ன ஒரு நிகழ்சி பின்வருமாறு


""ஒரு பெரிய அதிகாரியாக இருப்பவர் தனது வயதான அன்னையை சந்திக்க வந்து ஒரு ஐந்து நிமிடம் பேசி விட்டு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு கிளம்பினாராம்.அப்போது அந்த அம்மா அந்த அதிகாரி மகனைப் பார்த்து இந்தப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததற்குப் பதில் இன்னும் என்னுடன் அரை மணி நேரம் அதிகம் செலவழித்தால் நான் அதிகம் சந்தோஷப் பட்டிருப்பேன்..வயசான காலத்தில்... என்று சொன்னாளாம்""



இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் நாடகத்தனமாக பட்டது.இந்த மெட்டிரியலிஸ்டிக் உலகில் இது போல சொன்ன தாய் பணத்தேவை இல்லாத தன்னிறைவடைந்த வசதி படைத்த அம்மாவாக இருக்கும் என்று தோன்றியது.இதே சோத்துக்கே கஷ்டப்படும் அம்மாவாக இருந்தாலும் உளமார இப்படியே சொல்லியிருப்பாரா ? அல்லது செலவழிச்சு வந்ததுக்கு பதிலா ஒரு 200 ரூபாய் மணி ஆர்டர் பண்ணியிருந்தால் இந்த மாத செலவுக்கு ஆகியிருக்கும் என practical -ஆக சொல்லியிருப்பாரா? அப்படி சொன்னாலும் தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.


எனது அனுபவத்திலிருந்து என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

நீங்க என்ன நினைக்கிறீங்க ?


அன்புடன்...ச.சங்கர்

10 comments:

ச.சங்கர் said...

முதல் பின்னூட்டம் என்றும் போல் என்னுடையதே :)

Anonymous said...

வறுமையில் இருக்கும் போது ,மேலும் சில குழந்தைகள் இருந்து அவர்களை வளர்க்க மற்றும் சில இது போன்ற கடமை அந்த தாய்க்கு இரூக்குமே ஆனால் , நீங்கள் நினைப்பது போல் பணம் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று அந்த தாய் நினைக்கலாம் தப்பே இல்லை.
ஆனால் வறுமையில் இருந்தாலும் அந்த பணம் வெறும் அந்த பெற்றோரின் கைசெலவுக்கு தான் என்றால் பாசம் தான் பெரிதாக இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சங்கர் சார்,

தாய்மை மற்றும் தாயன்பு பற்றி நம் இலக்கியங்களும், பண்பாடும் ஒரு உன்னத இடத்தைக் கொடுத்துள்ளதால், யாராலும் அவ்வளவு எளிதாக மறுக்க முடியாத தோற்றம் ஏற்பட்டுவிட்டது! ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விடயம் //வயசான காலத்தில்//

பணம் இல்லை என்றாலும் கூட, வயதான தனிமையானது பாசத்துக்குத் தான் ஏங்க வைக்கும்! அவர்களுக்குப் பணம் கொடுத்தால் கூட, அதை வைத்து வயதான அவர்கள் பெரிதாக ஒன்றும் என்ஜாய் செய்து விடப் போவதில்லை!

மெட்டிரியலிஸ்டிக் உலகில், வாழ்வின் முற்பகுதியில் நீங்கள் சொன்னது சரியே! ஆனால் பிற்பகுதியில், அதுவும் மிகவும் வயதான பின்னர், இந்த ஏக்கம் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரத் தான் செய்கிறது! சிலர் அதை மறைத்துக் கொண்டு கவுரவமாக வாழ நினைக்கின்றனர்! அவ்வளவே!!

ச.சங்கர் said...

நன்றி...லட்சுமி

''வறுமையில் இருக்கும் போது ,மேலும் சில குழந்தைகள் இருந்து அவர்களை வளர்க்க மற்றும் சில இது போன்ற கடமை அந்த தாய்க்கு இரூக்குமே ஆனால் , நீங்கள் நினைப்பது போல் பணம் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று அந்த தாய் நினைக்கலாம் தப்பே இல்லை.""

வேறு குழந்தைகள் இல்லை என்றால்...
தன் சொந்த உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த மாதிரி எதிர் பார்த்தால் தப்பா? :))

ச.சங்கர் said...

வாங்க கண்னபிரான் ரவிசங்கர்,

எனக்கு சார் பட்டமெல்லாம் குடுக்காதீங்க நண்பரே :)

நல்ல கருத்து சொல்லியிருக்கிறீர்கள்... மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ( சொன்னால்) பார்ப்போம் :)

மாசிலா said...

எந்த தாயுமே தன் மகனிடம் அன்பைத்தான் எதிர்பார்ப்பாள். அந்த அன்பை இருவரும் எந்த கோணத்தில் அனுகிறார்கள் என்பதே இங்கு முக்கியம். அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் 'உறுவம்' தான் இங்கு முக்கியம். இருவரின் 'பார்வையும்' ஒரே திசையில். இருக்கிறதா என்பதை பொறுத்தும் இது வெளிப்படும். இடம், காலம், தேவை, வயது, சுற்றுப்புறம், சூழல் ஆகியவைகளை பொருத்தும் இது மாறுபடும்.
நீங்கள் கூறியிருப்பதுபோல் இரண்டாமவது தாயார் அன்பின் 'நினைப்பிலும்' தவறில்லை எனவே படுகிறது.

ச.சங்கர் said...

கருத்துக்கு நன்றி மாசிலா

அன்புடன்...ச.சங்கர்

Anonymous said...

//வேறு குழந்தைகள் இல்லை என்றால்...
தன் சொந்த உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த மாதிரி எதிர் பார்த்தால் தப்பா? :))//

அப்படி தன் தேவைக்கும் மட்டுமே என்றால் அதனை சுருக்கிக்கொண்டு பிள்ளைகளை பார்க்கவே ஆசைப் படுவார்கள்.பணத்தைக் காட்டிலும்.அதை தான் முன்னமே கூறி இருந்தேன்.
வளர்க்கும்போதே பாசத்துடனும் பணக்கஷ்டத்தையும் புரிய வைத்து வளர்க்கப்பட்ட பையன் என்றால் தானாகவே பணத்தினை மட்டும் அனுப்பி வைப்பான் வர முடியாததிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்பான். பாசமான அந்த தாய் வேண்டாம் நீ வந்தால் போதும் என்பார்கள்.
பணங்காய்ச்சி மரமாக வளர்த்திருந்தால் பணத்தை அனுப்பி வைத்துவிட்டு சந்தோஷமாக இருக்கும் இடத்தில் இருப்பான்.

தாய்பாசத்தை ஒருபோதும் வறுமை சாகடிக்காது.இது என் தாழ்மையான கருத்து.

ச.சங்கர் said...

மீண்டும் நன்றிகள் பல லட்சுமி

நன்றாக சொன்னீர்கள்... மாசிலாவும் இதை ஒட்டிய கருத்தையே

""தாய் மகன் இருவரின் 'பார்வையும்' ஒரே திசையில். இருக்கிறதா என்பதை பொறுத்தும் இது வெளிப்படும் ""

என்று சொல்லியிருக்கிறார்.

மஞ்சூர் ராசா said...

தாய்பாசத்தில் பணம் ஒரு முக்கிய பொருட்டல்ல என்றாலும் தேவைகள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவைக்கின்றன.

சில தாய்மார்கள் கொடுக்கும் பணத்தை மீண்டும் தனது மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் கண்ணபிரான் சொல்வதுபோல வயதான காலத்தில் இன்னும் சிறிது நேரம் மகன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் எல்லா தாய்மார்களும் விரும்புகிறார்கள்.