இப்பதான் சென்னை வலைப்பதிவர் latest சந்திப்புக்கு (17-12-06) போயிட்டு வந்தேன்.
மத்த (மூத்த) வலைஞர்கள் அது பத்தி கண்டிப்பா எழுதுவாங்க.அதுனால நான் அது பத்தி அதிகம் எழுதப் போவதில்லை.
அங்கு பேசிக் கொண்டிருந்த போது கேள்விப்பட்ட ஒரு விஷயம் கொஞ்சம் "திடுக்" ரகம்.
பொதுவாக இலங்கை பிரச்சினை பற்றி பேச்சும் பிறகு இங்குள்ள அகதிகள் முகாம்களில் வாழும் "அவல" நிலை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது எனக்கு அறியக்கிடைத்த ஒரு விஷயம்...பொதுவாக நாம் அனாதை ஆசிரமங்களுக்கோ அல்லது இன்ன பிற சேவை நிருவனங்களுக்கோ உதவி செய்வது போல் முகாம்களில் கஷ்டப்படும் அகதிகளுக்கு உதவுவது என்பது அவ்வளவு சுலபமில்லை...ஏன், எதற்கு , எங்கிருந்து உதவி, இதற்கு பணம் எங்கிருந்து வந்தது மாதிரியான ஆயிரத்தெட்டு "சிவப்பு நாடா" கேள்விகள் மற்றும் போலிஸ் பிரச்சனைகளுண்டு என இது பற்றி கொஞ்சம் அனுபவமுள்ள ஓரிரு வலைப்பதிவர்கள் சொன்னார்கள்..அப்படியனால் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்த நாட்டிலும் கஷ்டப் படும் இந்த சனங்களுக்கு "அரசியல் அல்லது அமைப்பு ரீதியாக இல்லாமல்" சக மனிதன், பொது சனம் என்கின்ற ரீதியில் " நேரடியாக " உதவ வழியே இல்லையா?
இதில் நான் அரசாங்க உதவிகள் அல்லது பிற அமைப்பு ரீதியான உதவிகளை குறை சொல்லவில்லை. அல்லது அகதிகளுக்காக மற்றவர் செய்ய விழையும் உதவிகளுள்ள கட்டுப்பாடுகளையும் தவறென்று சொல்லவில்லை..என்ன இருந்தாலும் அடுத்த நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் என்பதால் அவர்களுக்கு நேரடியாக உதவுவதில் கட்டுப்பாடுகள் இருக்கும்தான் என்பது புரிகிறது.
ஆனால் இலங்கையில் அமைதிப் பங்கம் ஏற்பட்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற "காலத்தே செய்த உதவி " மிக மிக அவசியம் என்று நான் கருதுகிறேன்.
தெரிந்தவர்கள் யாராவது இது பற்றி எழுதலாமே.
கூட்டு முயற்சியாக உதவி செய்ய ஆசை.(உணவு, உடை, குழந்தைகள் படிப்பு செலவை ஏற்பது என்பது மாதிரியாக).ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை எழுதுங்களேன்.
அன்புடன்...ச.சங்கர்
15 comments:
வழக்கப்படி முதல் பின்னூட்டம் டெஸ்ட் பின்னூட்டம்தான் :)
சொந்த நாட்டில்தான்
சோதனைகள் என்றால்
வந்த நாட்டிலும்
வாட்டிடுமோ வேதனைகள்?
:(
//வழக்கப்படி முதல் பின்னூட்டம் டெஸ்ட் பின்னூட்டம்தான் //
நீங்கள் என்ன என்றென்றும் அன்புடன் இருப்பவரா?
:))
// இலங்கையில் அமைதிப் பங்கம் ஏற்பட்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற "காலத்தே செய்த உதவி " மிக மிக அவசியம் என்று நான் கருதுகிறேன்//
உண்மை. நல்ல விஷயத்தை எடுத்து வைத்துள்ளீர்கள்!
சங்கர்,
சுடச் சுடத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதற்கு மிக்க நன்றி.
/* இலங்கையில் அமைதிப் பங்கம் ஏற்பட்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற "காலத்தே செய்த உதவி " மிக மிக அவசியம் என்று நான் கருதுகிறேன் */
உண்மை. என்னாலான உதவிகளைச் செய்ய நான் தயார்.
இரா.ஜெகன் மோகன்
கவிதை வடிவிலான பின்னூட்டத்தில் அந்த வாழ்விழந்த மக்களின் மேலான அனுதாபத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி
நாமக்கல் சிபி
நான் அன்புடன்...ச.சங்கர், என்றென்றும் அன்புடன் இருப்பவர் பாலா( எனது நண்பர்தான்) :)
உங்கள் கருத்துக்கு நன்றி
வெற்றி,
கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி.முயற்சி தொடங்க முனைப்புள்ளது..உங்களை போன்றோரின் ஆதரவுடன் கண்டிப்பாய் செயல்படுத்துவோம் என நம்பிக்கை பிறக்கிறது..மீண்டும் நன்றி.
காலம் மாறும் சங்கர்....காத்திருப்போம்.
வருகைக்கு நன்றி ஆழியூரான்
சங்கர்,
தேவையான பதிவு. எப்படி அவர்களுக்கு உதவலாம் என்று உடனடியாக கூற இயலவில்லை. விசாரித்துத் தான் பார்க்க வேண்டும். நான் தயார் தான். கூட ஒத்துழைப்பு தர இரண்டு அல்லது மூன்று பேர் முன் வர வேண்டும்.
எ.அ.பாலா
பாலா,
நன்றி..இது பற்றி முழுமையாக விசாரித்து சொல்லவும்...எந்த உதவி தேவைப்படினும் நானும் உன்னுடன் வருகிறேன்.
வாங்க சங்கர். உங்களையும் சந்திச்சதுல மகிழ்ச்சி. மொதப் பதிவு நீங்கதான் போல. :-)
நன்றி ஜி.ராகவன்
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
ஆமாம்.. முதல் பதிவு என்னுடையதுதான் :)...நேற்றிலிருந்து இன்னும் இது பற்றித்தான் யோசனை.
என்ன செய்ய முடிகிறதென்று பார்ப்போம் !!!!
அன்பு சங்கர், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நான் யாரா?அ. பாலா, சிபி, ராகவன் எல்லோருக்கும் தெரியும்.
//சொந்த நாட்டில்தான்
சோதனைகள் என்றால்
வந்த நாட்டிலும்
வாட்டிடுமோ வேதனைகள்?//
சொந்த நாட்டிலேயே
சுகமில்லை என்றானபின்னர்
வந்த நாட்டில்
என்ன வந்துவிடும்?
வாட்டம் என்பதே
வாடிக்கையானபின்னர்
வந்தநாடும்
விதிவிலக்காமோ?
சோகம் தொடர்கிறது
சுகமோ கிடைக்கவில்லை
தாகம் தீர்த்திடவே
தமிழகமே! தயாரா?
"""மஞ்சூர் ராசா said...
அன்பு சங்கர், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்."""
நன்றி மஞ்சூர் ராஜா, விரைவில் மேலதிகத் தகவல்களுடன் தொடர்பு கொள்கிறேன்
""""நான் யாரா?அ. பாலா, சிபி, ராகவன் எல்லோருக்கும் தெரியும்."""
என்ன? ஸ்மைலி போட மறந்துடுச்சா? எனக்கு தனி மடலில் படிக்க நல்ல கவிதைகள் அனுப்பும் என்னுடன் கூகுளில் பேசும் உங்களை எனக்கு தெரியாதுதான்.. சரி..சரி நீங்கள் சொன்ன அனைவரிடமும் கேட்டு :) தெரிந்து கொள்கிறேன். அதுசரி செளம்யாவும் அவளது குட்டி தங்கையும் செளக்கியமா ?
வாங்க எஸ்கே,
கவிதைக்கும் உணர்வுகளுக்கும் நன்றி
Post a Comment