இன்று அன்னையர் தினம்
இந்த உலகத்தில் நல்ல ஒழுக்கமும் வீரமும் உடையவனாகக் கூடிய நல்ல மகனைப் பெற்றுத் தருதல் என்னுடைய தலையாய கடமை என்று பறை சாற்றிய வீரத் தமிழ்த் தாய்க் குலத்திற்கு "அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் "
ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிரு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிரு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
புலவர்..பொன்முடியார், புறநானூறு..பாடல் எண் 312
உலகில் மகனைப் பெற்றுத் தருதல் என் தலையாய கடமை.அந்த மகனை சான்றோனாக ஆக்குதல் தந்தையின் கடமை.அவன் படைத் தொழிலில் சிறந்து விளங்க அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடமை.அவனை நல்வழியில் ஈடுபடச் செய்து ஒழுக்கமுடையவனாகச் செய்வது அரசனின் கடமை.அந்தச் சிறந்த மகனானவனுக்கு கடமை என்னவென்றால் ( நாட்டைக் காக்க ) போர்க்களத்தில் போர் செய்து யானைகளை வீழ்த்தி வெற்றியோடு திரும்பி வருதலாகும்.
அன்புடன்...ச.சங்கர்