Sunday, September 04, 2005

தமிழ் படைப்பு மற்றும் படைப்பாளிகள் பற்றிய பொது அறிவு

போன வாரம் ஜெயா T.V யில் குஷ்பு மாதா நடத்தும் " ஜாக்பாட் " தெரியாத்தனமாக?! பார்க்க நேர்ந்தது.
அதில் challange round என்று ஒரு கட்டம்.
அதில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி " எழுத்தாளர் அகிலனுக்கு ஞான பீடம் பரிசு எந்தப் புத்தகத்திற்கு வழங்கப் பட்டது ? "
பதில் சொல்லிக் கொண்டிருந்த அணி சொன்ன பதில் " சில நேரங்களில் சில மனிதர்கள் "
"தவறு" என்று சொல்லி விட்டு எதிரணியைப் பார்த்து " உங்களுக்கு தெரியுமா" என்றார் குஷ்பு.
அவர்கள் சொன்ன பதில் " பார்த்திபன் கனவு "இதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது-
1."உண்மையிலேயா இந்தக் கேள்வி கஷ்டமானதா அல்லது பொதுவாகவே நமது மக்களின் தமிழ் படைப்புகள் பற்றிய பொது அறிவு இந்த மட்டில்தான் இருக்கிறதா "
2. இரண்டு அணிகளும் பதில் சொல்கிறேன் பேர்வழி என உளறிக் கொட்டியதை "முயற்ச்சியாவது செய்தார்களே " அதுவும் " தமிழ் புஸ்தகப் பெயர்களை சொன்னார்களே " என சந்தோஷப் படுவதா இல்லை தலையில் அடித்துக் கொள்வதா...புரியவில்லை...
3.சமீபத்தில் வலைப்பதிவுகளில் புத்தக மீ மீ என ஒரு விளையாட்டை விளையாடினார்களே அதில் நான் படித்தது,என்னிடம் உள்ளது என்று புத்தகப் பட்டியல் எழுதினார்கள் அதை விடுத்து படித்த நல்ல பத்து தமிழ் புத்தகங்கள்,அதன் ஆசிரியர்,பெற்ற விருதுகள் முடிந்தால் புத்தகம் எதைப் பற்றியது...கதைக் கரு,களம் பற்றி சுருக்கமாக எழுதினா படிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் உபயோகமாகவும் இருக்குமில்லையா?அதுக்காக ஒரே புத்தகத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பல பேர் எழுதக் கூடாது(வலைகளில் அன்னியன் விமர்சனம் மாதிரி)...போரடித்து விடும்.
யோசனை எப்படி இருக்கு...நீங்க சொல்லுங்க...நல்லா இருந்தா யாராவது படித்தவர்கள் பத்து புத்தகம் பற்றி atleast ஐந்து புத்தகம் பற்றி எழுதி ஆரம்பித்து வையுங்களேன்...
நானா...நான் அவ்வளவு படிக்கலையே மக்கா...
அன்புடன்...ச.சங்கர்

9 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சங்கர்,

உங்கள் வலைப்பதிவில், நீங்கள் பல இடங்களில் திஸ்கி உபயோகித்திருக்கிறீர்கள். படிக்க முடியவில்லை.

உதா:

1.தமிழ்மணத்தின் நட்சத்திரக்குறியீடு

2. உங்களுக்குப் பிடித்த பதிவுகளில் சில & தலைப்பு

திஸ்கியில்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செய்திருந்தால், இந்தப் பின்னூட்டத்தைப் பொருட்படுத்தாதீர்கள்.

-மதி

dondu(#11168674346665545885) said...

உங்கள் பதிவை ஒருங்குறியில் மாற்றியிருக்கிறேன்.

போன வாரம் ஜெயா T.V யில் குஷ்பு மாதா நடத்தும் "ஜாக்பாட்" தெரியாத்தனமாக?! பார்க்க நேர்ந்தது.

அதில் challenge round என்று ஒரு கட்டம்.

அதில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி " எழுத்தாளர் அகிலனுக்கு ஞான பீடம் பரிசு எந்தப் புத்தகத்திற்கு வழங்கப் பட்டது ? "

பதில் சொல்லிக் கொண்டிருந்த அணி சொன்ன பதில்
" சில நேரங்களில் சில மனிதர்கள் "

"தவறு" என்று சொல்லி விட்டு எதிரணியைப் பார்த்து " உங்களுக்கு தெரியுமா" என்றார் குஷ்பு.

அவர்கள் சொன்ன பதில்
" பார்த்திபன் கனவு "

இதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது-
1."உண்மையிலேயா இந்தக் கேள்வி கஷ்டமானதா அல்லது பொதுவாகவே நமது மக்களின் தமிழ் படைப்புகள் பற்றிய பொது அறிவு இந்த மட்டில்தான் இருக்கிறதா "

2. இரண்டு அணிகளும் பதில் சொல்கிறேன் பேர்வழி என உளறிக் கொட்டியதை "முயற்ச்சியாவது செய்தார்களே" அதுவும் "தமிழ் புஸ்தகப்பெயர்களை சொன்னார்களே " என சந்தோஷப் படுவதா இல்லை தலையில் அடித்துக் கொள்வதா...புரியவில்லை...

3.சமீபத்தில் வலைப்பதிவுகளில் புத்தக மீ மீ என ஒரு விளையாட்டை விளையாடினார்களே அதில் நான் படித்தது,என்னிடம் உள்ளது என்று புத்தகப் பட்டியல் எழுதினார்கள் அதை விடுத்து படித்த நல்ல பத்து தமிழ் புத்தகங்கள்,அதன் ஆசிரியர்,பெற்ற விருதுகள் முடிந்தால் புத்தகம் எதைப் பற்றியது...கதைக் கரு,களம் பற்றி சுருக்கமாக எழுதினா படிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் உபயோகமாகவும் இருக்குமில்லையா?அதுக்காக ஒரே புத்தகத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பல பேர் எழுதக் கூடாது(வலைகளில் அன்னியன் விமர்சனம் மாதிரி)...போரடித்து விடும்.

யோசனை எப்படி இருக்கு...நீங்க சொல்லுங்க...நல்லா இருந்தா யாராவது படித்தவர்கள் பத்து புத்தகம் பற்றி atleast ஐந்து புத்தகம் பற்றி எழுதி ஆரம்பித்து வையுங்களேன்...நானா...நான் அவ்வளவு படிக்கலையே மக்கா...

அன்புடன்...ச.சங்கர்

By the way அகிலனின் சித்திரப்பாவைக்குத்தான் ஞானபீட விருது கொடுக்கப்பட்டது. அறுபதுகளில் விகடனில் தொடர்கதையாக வந்தது. அக்கதையை தூக்கி அடிக்கும் பல கதைகளை அகிலன் அவர்கள் எழுதியிருக்கிறார். இருந்தாலும் பரிசென்னவோ இதற்குத்தான். அவர் எழுதி கல்கியில் வெளியான வேஞ்கையின் மைந்தனுக்கு சாஹித்ய அகாடெமி விருது கிடைத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

P.V.Sri Rangan said...

அகலனின் சித்திரப்பாவையைக் சின்னத்திரையாகக்கூட எடுத்திருந்தார்கள்.அதில் சங்கர்ஜானகியின் பேத்தி அற்புதமாக நடித்து எல்லோரையும் அழவைத்தார்.சித்திரப்பாவை அற்புதமானவொரு இலக்கியம்.இளங்கோவடிகளின் சிலம்பு போன்று வாசிக்க,வாசிக்க அலுக்காத படைப்பு.இப்பவெல்லாம் யாருதான் அற்புதமான படைப்புகளைத் தருகிறார்கள்!

ச.சங்கர் said...

அடி ஆத்தி என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவருக்கு நன்றி
ஊருக்கு உபதேசமெல்லாம் செய்யவில்லை ஐயா...படித்தவர்கள் எழுதினால் என்னைப் போல் படிக்காதவர்கள் பயன் பெறலாமே என்று எழுதினேன்
அகிலன் யார் ..என்ன சாதித்தார் என்று எனக்கும் முழுவதும் தெரியாது...டோண்டு அவர்கள் சில குறிப்புகள் கொடுத்துள்ளார்..பார்க்கவும்

நன்றி மதி கந்தசாமி அவர்களே
தவறுதலாக திஸ்கியில் தட்டச்சப்பட்டு விட்டது.திருத்தம் செய்து விடுகிறேன்

நன்றி டோண்டு அவர்களே

கொழுவி said...

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்.
ஞானபீட விருது குறிப்பிட்டவொரு படைப்புக்கு வழங்கப்படுவதா?
அல்லது குறிப்பிட்டவரின் இலக்கியச் சேவைக்காக வழங்கப்படுகிறதா?
அப்படியாயின் ஜெயக்காந்தனுக்கு எந்தப் புத்தகத்துக்காக ஞானபீடம் கிடைத்தது?

ச.சங்கர் said...

நன்றி கருணா & கொழுவி

கொழுவி...ஞான் பீட விருது , இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 8(schedule VIII of Indian constitution)--இல் இடம் பெற்றுள்ள இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளருக்கு
ஆக்கபூர்வமான இலக்கிய படைப்புக்காக வழங்கப் படுகிறது.1965 முதல் 1981 வரை தனிப்பட்ட படைப்புகளுக்கு வழங்கப் பட்டு வந்த இந்த விருது 1982-ஆம் வருடம் முதல் படைப்பாளிகளின்
ஒட்டுமொத்த இலக்கிய சேவை / பங்களிப்பிற்காக வழங்கப் படுகிறது.
தமிழில் 1975-ல் அகிலனுக்கு " சித்திரப் பாவை " புதினத்திற்காகவும், 2002-ல் ஜெயகாந்தனுக்கு தமிழ் இலக்கியத்திற்கு செய்த பங்களிப்பிற்காகவும் வழங்கப் பட்டுள்ளது

அன்புடன்...ச.சங்கர்

Ramya Nageswaran said...

சங்கர் அவர்களே, உங்கள் யோசனை நல்லா தான் இருக்கும். விஷயம் தெரிஞ்சவங்க எழுதினா நானும் படிப்பேன்.

ramachandranusha(உஷா) said...

சித்திரபாவை அக்காலத்தில் கொஞ்சம் புரட்சிகருத்துகளை சொல்லி, வாசகர்களிடையே புயலை கிளப்பியதாக என் அம்மா சொல்லியிருக்கிறார். ஆண், பெண் உறவு என்றால் என்னவென்றே தெரியாத நாயகி, வில்லன் முத்தமிட்டதற்காக கற்பிழந்து
விட்டதாய் பயந்து நாயகனை ஒதுக்கி, வில்லனை மணம் புரிந்து அவதிபடுவாள். கடைசியில் நாயகனுடன் இணைவாள். எப்போதோ
படித்தது ஞாபகம் இருந்தவரையில் எழுதுகிறேன். டி.வி தொடரில் ஸ்டாலின் ஹீரோவாக நடித்தார் என்று நினைக்கிறேன்.
ஆனால் அகிலனின் "எங்கே போகிறோம்?" என்று மிக பிடித்தது. அகிலனின் நாயகர்கள்- அக்கால எழுத்தாளர்களின் நாயகர்கள், நாயகிகள் பெரும்பாலும் லட்சியவாதிகளாய்தான் இருப்பார்கள்.

ச.சங்கர் said...

நன்றி உஷா மற்றும் ரம்யா nageswaran
புத்தகங்கள் , ஆசிரியர்கள் பற்றி குறிப்புகள் நானே திரட்டிக் கொண்டிருக்கிறேன்
இன்னும் சில நாட்களில் வலை பதிக்கிறேன்( atleast to start with)

அன்புடன்...ச.சங்கர்