Wednesday, September 07, 2005

Problem in publishing in unicode

யூனிகோடில் பதிக்க முடிகிறதா என்று ஒரு டெஸ்ட் !!!

Tuesday, September 06, 2005

ஆசிரியர் தினம் --சில சிந்தனைகள்

வலைத்தளங்களிலும், குழுமங்களிலும் ஆசிரியர் தினம் பற்றி பலர் கவிதை மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பற்றி எழுதியாகி விட்டது.

யோசித்துப் பார்த்ததில் எனக்கு நினைவுக்கு வந்த ஒரு ஆசிரியரை பற்றி எழுதலாம் என எண்ணினேன்.விளைவு இதோ!!!

1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான் " ஏன் இன்னும் லிபியா விழவில்லை "
படைத்தளபதி பயந்து கொண்டே " சர்,அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது"
முசோலினி " யார் அவர்களை வழி நடத்துவது ?"
தளபதி " ஒமர் முக்தார் "
முசொலினி " ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!"


தளபதி " சர்,அவர் ஒரு ஆசிரியர்...He is a teacher "முசோலினி ஆச்சரியத்துடன் " a teacher ?!!" பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே " Even I was a teacher " என்கிறான்.

ஒரு படத்த்ல் இடம் பெற்ற காட்சி இது.உண்மையில் இப்படி நடந்ததா அல்லது சினிமாவுக்காக சித்தரிக்கப் பட்ட காட்சியா தெரியாது.ஆனால் பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட , கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய "ஓமர்-அல்-முக்தார்" பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.


கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த , இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த , பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா ?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்கு வரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது.தணியாத சுதந்திர வேட்க்கையும்,அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை.அவரே முன்னின்று போரிட்டார்.முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது,அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார்.இத்தாலியப் படை அவரை சலோக் நகரில் , 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி,அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது)



சிறையில் சிறை அதிகாரி "ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை ?"என்ற போது " ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும்நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும் " என்றாராம் ஒமர் முக்தார்.

வாழ்க இவர் போன்ற ஆசிரியர்கள்...அவர் மாதிரியான மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் ஒரு சல்யூட்.

பின் குறிப்பு :ஒமர் முக்தார் பற்றி " Omer Mukta-The Lion of Desert " என்ற படம் 1984 இல் வெளி வந்தது.Antony Quinn ஒமர் முக்தாராக அருமையாக நடித்திருப்பார்.பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.பல ஆஸ்கர்களை தட்டிச் செல்லும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்தப் படம் ஒரு முக்கிய ஆஸ்கர் கூட வாங்காதது துரதிஷ்டமே.

காரணம் அதே ஆண்டு (1984)ஒமர் முக்தார் போன்றே தன் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய ஆனால் மிகவும் வித்தியாசமான முறையில் போராடிய மற்றொரு உன்னதமான மனிதனைப் பற்றிய திரைப் படம் வெளிவந்து நடிப்பு,டைரக்ஷன் உட்பட பல ஆஸ்கர்களை(ஆறோ அல்லது ஏழோ) தட்டிச் சென்றது....
>>
>>
>>
>>
>>
>>
>>
>>

அந்தப் படம் " காந்தி "

அன்புடன்...ச.சங்கர்

Sunday, September 04, 2005

தமிழ் படைப்பு மற்றும் படைப்பாளிகள் பற்றிய பொது அறிவு

போன வாரம் ஜெயா T.V யில் குஷ்பு மாதா நடத்தும் " ஜாக்பாட் " தெரியாத்தனமாக?! பார்க்க நேர்ந்தது.
அதில் challange round என்று ஒரு கட்டம்.
அதில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி " எழுத்தாளர் அகிலனுக்கு ஞான பீடம் பரிசு எந்தப் புத்தகத்திற்கு வழங்கப் பட்டது ? "
பதில் சொல்லிக் கொண்டிருந்த அணி சொன்ன பதில் " சில நேரங்களில் சில மனிதர்கள் "
"தவறு" என்று சொல்லி விட்டு எதிரணியைப் பார்த்து " உங்களுக்கு தெரியுமா" என்றார் குஷ்பு.
அவர்கள் சொன்ன பதில் " பார்த்திபன் கனவு "இதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது-
1."உண்மையிலேயா இந்தக் கேள்வி கஷ்டமானதா அல்லது பொதுவாகவே நமது மக்களின் தமிழ் படைப்புகள் பற்றிய பொது அறிவு இந்த மட்டில்தான் இருக்கிறதா "
2. இரண்டு அணிகளும் பதில் சொல்கிறேன் பேர்வழி என உளறிக் கொட்டியதை "முயற்ச்சியாவது செய்தார்களே " அதுவும் " தமிழ் புஸ்தகப் பெயர்களை சொன்னார்களே " என சந்தோஷப் படுவதா இல்லை தலையில் அடித்துக் கொள்வதா...புரியவில்லை...
3.சமீபத்தில் வலைப்பதிவுகளில் புத்தக மீ மீ என ஒரு விளையாட்டை விளையாடினார்களே அதில் நான் படித்தது,என்னிடம் உள்ளது என்று புத்தகப் பட்டியல் எழுதினார்கள் அதை விடுத்து படித்த நல்ல பத்து தமிழ் புத்தகங்கள்,அதன் ஆசிரியர்,பெற்ற விருதுகள் முடிந்தால் புத்தகம் எதைப் பற்றியது...கதைக் கரு,களம் பற்றி சுருக்கமாக எழுதினா படிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் உபயோகமாகவும் இருக்குமில்லையா?அதுக்காக ஒரே புத்தகத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பல பேர் எழுதக் கூடாது(வலைகளில் அன்னியன் விமர்சனம் மாதிரி)...போரடித்து விடும்.
யோசனை எப்படி இருக்கு...நீங்க சொல்லுங்க...நல்லா இருந்தா யாராவது படித்தவர்கள் பத்து புத்தகம் பற்றி atleast ஐந்து புத்தகம் பற்றி எழுதி ஆரம்பித்து வையுங்களேன்...
நானா...நான் அவ்வளவு படிக்கலையே மக்கா...
அன்புடன்...ச.சங்கர்